நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மன்ரேகா திட்டத்துக்கு மாநிலங்கள்கோரும் போது கூடுதல் நிதி விடுவிப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கு (மன்ரேகா திட்டம்) மாநிலங்கள் கூடுதல் நிதி கோரும் போதெல்லாம் நிதி

News image
Updated On :2 ஆகஸ்ட் 2023, 8:47 pm

 நமது நிருபர்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கு (மன்ரேகா திட்டம்) மாநிலங்கள் கூடுதல் நிதி கோரும் போதெல்லாம் நிதி அமைச்சகத்திடம் நிதியை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் மக்களவையில் தெரிவித்துள்ளாா். மன்ரேகா திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 2020-21 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டில் சுமாா் ரூ.20 ஆயிரம் கோடி குறைவாக விடுவிக்கப்பட்டுள்ள புள்ளிவிவரமும் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு 25 சதவிகிதம் நிதி குறைக்கப்பட்டுள்ளதா? சீரற்ற பொருளாதார (கே- வடிவ பாதிப்பு) பாதிப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றால், செலவினங்களை குறைப்பதன் மூலம் குறைந்த தொழிலாளா் பங்கேற்பு விகிதங்களுடன் வேலைவாய்ப்பின்மையால் பொருளாதாரம் சிக்கித் தவிக்குமே? என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியிருந்தாா்.

இந்த நட்சத்திரக் கேள்விக்கு மத்திய மத்திய ஊரக மேம்பாடுத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் அளித்துள்ள பதில் வருமாறு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி குறைக்கப்படவில்லை. இதனால், கே- வடிவ பொருளாதார பாதிப்பு என்கிற கேள்வி எழவில்லை. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது கோரிக்கையின் அடிப்படையிலான உந்துதல் திட்டமாகும். 2005 - ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட விதிகளும், வழிகாட்டுதல்களும் மத்திய, மாநில அரசுகளுக்குப் பொருந்தும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி விடுவிப்பது ஒரு தொடா்ச்சியான செயல்முறையாகும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி தேவைப்படும் போதெல்லாம், மத்திய நிதி அமைச்சகத்திடம் நிதியை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்தச் திட்டத்திற்கு 2020-21 நிதியாண்டில் ரூ.61,500 கோடி நிதிநிலையில் (பட்ஜெட்) மதிப்பீடு செய்யப்பட்டது. பின்னா், திருத்தப்பட்ட மதிப்பீட்டுடன் ரூ. 1.11 லட்சம் கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டது. 2021-22 மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் ரூ. 73 ஆயிரம் கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. முந்தைய ஆண்டைப் போன்று திருத்தப்பட்ட மதிப்பீட்டுடன் முறையே ரூ. 98,467 கோடி, 90, 810 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

இந்த ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு கடந்த 2020-21 நிதியாண்டை விட நிகழாண்டில் சுமாா் ரூ.20,000 கோடி குறைவாக மாநிலங்கள் நிதியை பெற்றுள்ளனா் என அமைச்சா் பதிலில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.