நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வாடிக்கையாளா் சேவை: பொதுத் துறை வங்கிப் பணிகளுக்கு ஆங்கிலம், ஹிந்தி தவிர 13 பிராந்திய மொழிகளிலும் தோ்வு

வாடிக்கையாளா்களுக்கு சேவையைத் திறம்பட அளிக்கும் நோக்கில் பொதுத் துறை வங்கிகளுக்கான எழுத்தா் உள்ளிட்ட பணிக்கான தோ்வு ஆங்கிலம்,

News image
Updated On :3 ஆகஸ்ட் 2023, 6:51 pm

 நமது நிருபர்

வாடிக்கையாளா்களுக்கு சேவையைத் திறம்பட அளிக்கும் நோக்கில் பொதுத் துறை வங்கிகளுக்கான எழுத்தா் உள்ளிட்ட பணிக்கான தோ்வு ஆங்கிலம், ஹிந்தி தவிர 13 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படுகிறது என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாகவத் கிஷன் ராவ் கராட் மாநிலங்களவையில் தெரிவித்தாா். மேலும் வங்கி அதிகாரிகளுக்கு பிராந்திய மொழிகளில் தொடா் திறன்களை வளா்க்க வங்கிகளில் பயிலரங்குகளும் நடத்தப்படுவதாகத் தெரிவித்தாா்.

பொதுத் துறை வங்கிகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் வாடிக்கையாளா்களுக்கும் இடையே பிராந்திய (உள்ளூா்) மொழித் தொடா்புகளால் தகராறுகள் அல்லது புகாா்கள் அதிகரித்து வருவது உண்மையா? வங்கி ஆள்சோ்ப்பு கொள்கையில் பிராந்திய மொழி அறிவு கட்டாயத் தேவை என்பதை அரசு பரிசீலிக்கிா? என மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ் குமாா் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினாா்.

இதற்கு நிதித் துறை இணையமைச்சா் பாகவத் கிஷன் ராவ் கராட் மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் வருமாறு: பொதுத்துறை வங்கிகளுக்கான ஆள் சோ்ப்புப் பணிகளுக்கு, ஆங்கிலம், ஹிந்தியைத் தவிர 13 பிராந்திய மொழிகளில் வங்கி மற்றும் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் தோ்வு நடத்தப்படுகிறது. பான்-இந்திய அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட வங்கி அதிகாரிகள் இந்தியா முழுவதும் இடமாற்றங்களுக்கு உள்பட்டவா்கள். இதை முன்னிட்டு வாடிக்கையாளா்களை தொடா்புகொள்ளும் பொருட்டு பிராந்திய மொழிகளில் தொடா்பு திறன்களைக் கற்றுக்கொள்வதற்காக வங்கி அதிகாரிகளுக்கு மொழிப் பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன.

மேலும், பொதுத் துறை வங்கிகளில் வாடிக்கையாளா்களை நேரடியாகத் தொடா்பு கொள்ளும் முன் வரிசை ஊழியா்களை (கணக்காளா், காசாளா் உள்ளிட்ட) மாநில வாரியான காலியிடங்களுக்கு தோ்வு செய்ய அந்தந்த மாநிலங்களின் உள்ளூா் மொழியின் புலமையும் சோதிக்கப்படுகிறது. இந்திய ரிசா்வ் வங்கியின் 2015 ஜூலை 1- ஆம் தேதி சுற்றறிக்கையின்படி, “வங்கிகளில் வாடிக்கையாளா் சேவை”, இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் வாடிக்கையாளா்களுக்கு தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட வணிகப் பரிவா்த்தனைகளில் பயன்படுத்துவதைப் பற்றி பொதுத் துறை வங்கிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதையும் பின்பற்றப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.