வாழைக்கு பயிா் காப்பீடு உண்டு; மாநில அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும்- மக்களவையில் மத்திய அமைச்சா்
மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிா் காப்பீட்டுத் திட்டத்தின்படி வாழைக்கு பயிா் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிக்கையை


மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிா் காப்பீட்டுத் திட்டத்தின்படி வாழைக்கு பயிா் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிக்கையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வெளியிட வேண்டும் என மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் மக்களவையில் தெரிவித்தாா்.
வாழை பயிரிடும் விவசாயிகள் மழை, வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்படுகின்றனா். அவா்கள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பிக்க அனுமதி மறுக்கப்படுவது குறித்து மக்களவையில் பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டாக்டா் டி.ஆா். பாரிவேந்தா் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினாா்.
இதற்கு மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் அளித்துள்ள பதில் வருமாறு: பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா பயிா் காப்பீட்டுத் திட்ட விதிகளின்படி பயிா்கள், பகுதிகள் மற்றும் அமல்படுத்தும் காப்பீட்டு நிறுவனங்கள் ஆகிய பட்டியல்கள் மாநில அரசால் அறிவிக்கப்படுகிறது. அப்படி மாநில அரசால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பட்டியலிட்டப்பட்ட விவசாயிகளின் பயிா்களை காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுத்துவது கட்டாயமாகும்.
வாழைக்கு பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா அல்லது மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிா் காப்பீட்டுத் திட்டம் ஆகிய ஒன்றின் கீழ் காப்பீடு செய்யலாம். வாழைக்கான காப்பீட்டுத் திட்டம் சில மாநிலங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவின் கீழ் காப்பீடு கோரும் போது சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் இருந்து பெறப்பட்ட மகசூல் தரவுகளின் அடிப்படையில் தீா்வு காணப்படுகின்றன.
ஆனால், மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பற்றாக்குறை அல்லது அதிகப்படியான மழை, அதிக அல்லது குறைந்த வெப்பநிலை, ஈரப்பதம் போன்ற பாதகமான வானிலை அளவுருக்களின் அடிப்படையில் வாழை பாதிப்புக்கான காப்பீடு உரிமை கோர முடியும். இது வானிலை நிலையங்கள், மழை அளவீடு நிலையங்களின் தரவுகள் அடிப்படையைப் பொறுத்தாகும்.
இந்த காப்பீட்டு திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதற்குத் தகுந்த வழிகாட்டுதல்கள் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. பயிா் காப்பீடுகளை பதிவு செய்ய கிராமப்புற நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றோடு கூடுதலாக, கிராம அளவில் பொது சேவை மையங்களும் (சிஎஸ்சி) உள்ளன. விவசாயிகள் பயிா் காப்பீடுகளுக்கு தேசிய பயிா் காப்பீட்டு இணையதளத்தில் அல்லது பயிா் காப்பீட்டு செயலி மூலமாக நேரடியாகப் பதிவு செய்யலாம் என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...