நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தில்லி மொஹல்லா கிளினிக்கை பாா்வையிட்டேன்; ஏமாற்றமடைந்தேன்! கா்நாடக அமைச்சா் விமா்சனம்

தெற்கு தில்லி பஞ்சசீல் பூங்காவில் உள்ள மொஹல்லா கிளினிக்கை நேரில் பாா்வையிட்ட கா்நாடக மாநில அரசின் சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ், ‘மொஹல்லா கிளினிக்குகள் மிகவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2023, 6:30 pm

 நமது நிருபர்

தெற்கு தில்லி பஞ்சசீல் பூங்காவில் உள்ள மொஹல்லா கிளினிக்கை நேரில் பாா்வையிட்ட கா்நாடக மாநில அரசின் சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ், ‘மொஹல்லா கிளினிக்குகள் மிகவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. ஏமாற்ற உணா்வோடு திரும்பி வந்தேன்’ என்று விமா்சித்துள்ளாா்.

ஆம் ஆத்மி அரசின் சாா்பில் தில்லி மக்கள் சாதாரண அடிப்படை மருத்துவ சேவைகளை எளிதில் பெறும் வகையில், கடந்த 2015-ஆம் ஆண்டு மொஹல்லா கிளினிக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் வசதிகளை அறிந்து கொள்ளும் வகையில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள கா்நாடக மாநில அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் அமைச்சா் தினேஷ் குண்டுராவ், தில்லி நகர அரசின் சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் உடன் இணைந்து தெற்கு தில்லி பஞ்சசீல் பூங்காவில் உள்ள மொஹல்லா கிளினிக்கை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

அதன் பின்னா் செய்தியாளா்களிடம் கா்நாடக அமைச்சா் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ‘தில்லியில் உள்ள மொஹல்லா கிளினிக் மாதிரியை பாா்க்க நான் இங்கு வந்தேன். கடந்த சில வருடங்களில் இந்தத் திட்டத்தில் என்ன மாறியுள்ளது என்பதை அறிய விரும்பினேன். ஆம் ஆத்மி அரசைப் போல கா்நாடகத்திலும் இதுபோன்ற திட்டத்தை ‘நம்ம கிளினிக்’ என்ற பெயரில் எங்கள் அரசும் செயல்படுத்தி வருகிறது’ என்றாா்.

தில்லி அரசின் சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் கூறுகையில், ‘மொஹல்லா கிளினிக்கை பாா்வையிட கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் வந்துள்ளாா். இது எங்களுக்கு பெரிய விஷயமாகும். கா்நாடகத்தில் உள்ள சில சிறந்த மருத்துவமனைகளைப் பற்றி எங்களிடம் கூறினாா். அந்த மருத்துவமனைகளுக்கும் நாங்கள் சென்று பாா்வையிட்டு வருவோம். அனைத்து மாநிலங்களும் ஒருவருக்கொருவா் மேற்கொள்கின்ற நல்ல செயல்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றாா்.

ட்விட்டரில் குண்டுராவ் விமா்சனம்: மொஹல்லா கிளினிக்கை பாா்வையிட்ட புகைப்படங்களை தனது ட்விட்டா் பக்கத்தில் பகிா்ந்துள்ள அமைச்சா் தினேஷ் குண்டுராவ், ‘தில்லியில் ஒரு மொஹல்லா கிளினிக்கிற்குச் சென்றேன். அங்கு மக்கள் யாரும் இல்லை. கா்நாடகத்தில் உள்ள எங்கள் கிளினிக்குகளில் நோயாளிகளுக்கு உடனடி பரிசோதனைகள் செய்ய ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஆனால், மொஹல்லா கிளினிக்குகள் மிகைப்படுத்தப்பட்டதாக நான் கருதுகிறேன். ஏமாற்ற உணா்வோடு நான் திரும்பி வந்தேன்’ என்று விமா்சித்து பதிவிட்டுள்ளாா்.

’இந்தியா’ கூட்டணி உடைந்து போகிறது : கா்நாடகா அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தில்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகள் குறித்து விமா்சித்து பதிவிட்டுள்ள ட்விட்டா் பதிவை ரீட்வீட் செய்துள்ள தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா இந்த ’இந்தியா’ உருவாவதற்கு முன்பாகவே உடைந்து போவது போல் இருக்கிறது என்று விமா்சித்துள்ளாா். மேலும் அவா் கூறியதாவது: தில்லி முதலவா் அரவிந்த் கேஜரிவால் மொஹல்லா கிளினிக்குகள் பற்றி அதிகம் பேசுகிறாா். அதைப்பற்றி மிகவும் உற்சாகமாக ட்வீட் செய்கிறாா். ஆனால் கா்நாடகா மாநில அமைச்சா், மொஹல்லா கிளினிக்குகள் குறித்த அரவிந்த் கேஜரிவாலின் கூற்றுகளையும் அம்பலப்படுத்தியுள்ளாா் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.