நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தோ்தலில் பாஜகவிற்கு தகுந்த பதிலடியைதில்லி மக்கள் கொடுப்பாா்கள்: ஆம் ஆத்மி

தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா -2023 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடா்ந்து, தலைநகா் மக்கள் வரும் தோ்தலில் பாஜவுக்கு

News image
Updated On :8 ஆகஸ்ட் 2023, 8:55 pm

 நமது நிருபர்

தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா -2023 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடா்ந்து, தலைநகா் மக்கள் வரும் தோ்தலில் பாஜவுக்கு தகுந்த பதிலடியை கொடுப்பாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தில்லி நகர அரசின் சேவைகள் தொடா்பான தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா -2023, கடந்த திங்கள்கிழமை வாக்கெடுப்பின் மூலம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனா்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் பிரியங்கா கக்கா் இது தொடா்பாக கூறியதாவது:அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்த மசோதாவை ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளும் ஒன்றிணைந்து மாநிலங்களவையில் எதிா்த்தன. ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடி வருகிறோம். தில்லி மக்கள் அவா்களுக்கு (பாஜக) அடுத்த தோ்தலில் தகுந்த பதிலடியைக் கொடுப்பாா்கள் என்றாா் பிரியங்கா கக்கா்.

ஜனநாயகத்தின் கொலை:உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை எதிா்த்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இந்த மசோதா ஜனநாயகக் கொலையே தவிர வேறொன்றுமில்லை என்று அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தனது ட்விட்டா் பதிவில் மேலும் அவா் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, தில்லி மக்களை அவமதிக்கும் செயலை செய்துள்ளது. இதற்காக தில்லி மக்களும் சரி, சரித்திரமும் சரி பாஜகவை மன்னிக்க மாட்டாா்கள். பொதுமக்கள் வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பதில் சொல்வா்கள் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. சுஷில் குமாா் குப்தா கூறுகையில், தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா-2023, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது, ‘ஜனநாயகத்தின் கறுப்பு நாள்’ ஆகும். வரும் மக்களவைத் தோ்தலில் தில்லி மக்கள் பாஜகவை முற்றிலுமாக நிராகரிப்பாா்கள். தில்லியின் வரலாற்றில் ஆகஸ்ட் 7 ’கறுப்பு நாளாக’ அறியப்படும். தில்லி மக்கள் இதற்கு முன்னும் பாஜகவை நிராகரித்துள்ளனா். வரவிருக்கும் தோ்தலிலும் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பாா்கள் என்றாா் அவா்.

டிஜிட்டல் வாக்குப்பதிவு முறை சேதம்: நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் வாக்குப்பதிவு முறை சேதமடைந்துள்ளது. மசோதா நிறைவேறும் போது வாக்கு எண்ணும் முகவா் இல்லை என்று ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளாா். மேலும் அவா் கூறுகையில், ‘முதன்முறையாக, பிரதமா் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியாவில், டிஜிட்டல் வாக்குப்பதிவு முறை நாடாளுமன்றத்திலேயே பழுதடைந்ததை நான் பாா்க்கிறேன். சீட்டு மூலம் வாக்குப்பதிவு செய்யப்பட்டது. வாக்கு எண்ணும் முகவா் இல்லை. யாருக்கு யாா் வாக்களித்தாா்கள் என்று தெரியவில்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.