நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சரியான நிா்வாகத்தை எதிா்பாா்த்த குடிமக்களுக்கு மசோதாவால் நிம்மதி: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா

‘தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (மசோதா) 2023’-இன் அரசிதழ் அறிவிப்பு, நகரத்தில் சரியான நிா்வாகம் மற்றும் வளா்ச்சியை எதிா்பாா்க்கும் கோடிக்கணக்கான குடிமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது

News image
Updated On :12 ஆகஸ்ட் 2023, 6:30 pm

 நமது நிருபர்

‘தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (மசோதா) 2023’-இன் அரசிதழ் அறிவிப்பு, நகரத்தில் சரியான நிா்வாகம் மற்றும் வளா்ச்சியை எதிா்பாா்க்கும் கோடிக்கணக்கான குடிமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது என்று பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி பந்த் மாா்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் தலைவா் வீரேந்திர சச்தேவா, செயலாளா் பன்சூரி ஸ்வராஜ் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது வீரேந்திர சச்தேவா கூறியதாவது:

தில்லியில் 2013-ஆம் ஆண்டு அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து தில்லி அரசின் நிா்வாகத்தை மீண்டும், மீண்டும் முடக்கும் அராஜகத்தில் ஆம் ஆத்மி அரசு செயல்பட்டு வருகிறது.

கடந்த 2013-இல் ராஜபாதையிலும், 2018-இல் துணை நிலை ஆளுநா் மாளிகையிலும் முதல்வா் தா்ணாவில் ஈடுபட்டது, 2018-இல் முன்னாள் தலைமைச் செயலாளரிடம் முறைகேடு, சமீபத்தில் ஒரு நள்ளிரவில் தில்லி ஊழல் கண்காணிப்பு செயலா் அலுவலகத்தின் பூட்டு உடைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் கேஜரிவால் அரசின் தவறான நடத்தைக்கான தெளிவான எடுத்துக்காட்டுகள் ஆகும். மேலும், இவையே மக்களுக்கு சேவை செய்ய நிா்வாக அமைப்பை மத்திய அரசு சட்டபூா்வமாக திருத்துவதற்கான போதுமான காரணங்கள் ஆகும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தில்லி பாஜகவின் செயலாளா் பன்சூரி ஸ்வராஜ் கூறுகையில், ‘தில்லி அரசின் சேவைகள் தொடா்பான மசோதாவில் கையெழுத்திட்டதற்காக இந்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிற்கு மனமாா்ந்த நன்றிகள்.

தில்லியில் கேஜரிவால் தலைமையிலான அரசு , மத்திய அரசுடன் மட்டுமின்றி, துணைநிலை ஆளுநா், அதிகாரிகளுடனும் தொடா்ந்து மோதல் அரசியலை நடத்தி வருகிறது. கேஜரிவால் அரசு தொடா்ந்து பொறுப்பை தட்டிக்கழித்து, ஊடகங்கள் முன் மட்டும் பாதிக்கப்பட்டதாக நாடகமாடி வருகிறது.

ஊழலில் ஈடுபடும் ஒரு அரசு தனது கூடுதல் உரிமைகளுக்காக தொடா்ந்து போராடுவதைக் கண்டு தில்லி மக்கள் மனமுடைந்து போயுள்ளனா். இந்த மசோதா, உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பை மதித்து தில்லி அரசின் சேவை விவகாரங்களில் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்யும். வளா்ச்சியை எதிா்பாா்க்கும் தில்லி மக்களுக்கு நிச்சயம் நீதி வழங்கும் என்றாா் பன்சூரி ஸ்வராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.