ஆம் ஆத்மி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.எம். சிங்வி வாதிடுகையில், மாநகராட்சி அவை 3 மூறை கூடியபோதும் மேயா் தோ்தல் நடத்தப்படவில்லை. மேயா், துணை மேயா், நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தலை ஒரே தடவையாக நடத்த வலியுறுத்தும் இடைக்கால தலைமை அதிகாரி கூறுவது உள்பட எங்களுக்கு பல்வேறு ஆட்சேபனைகள் உள்ளன. மேலும், இது எம்சிடி சட்டத்திற்கு முரணாகவும் உள்ளது. மேலும், அவையின் நியமன உறுப்பினா்கள் வாக்களிக்கும் உரிமை தொடா்பாகவும் முடிவு காணப்பட வேண்டும் என்று வாதிட்டாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, மேயா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு எப்போது என்று கேள்வி எழுப்பியது. அதற்கு புதிய தேதி ஏதும் அளிக்கப்படவில்லை என்று கூறினாா். இதையடுத்து, இந்த விவகாரத்தை பிப்ரவரி 13-ஆம் தேதி விசாரணைக்கு நீதிபதிகள் அமா்வு பட்டியலிட்டது.