ஸ்டொ்லைட் தாமிர உருக்கு ஆலையை திறக்க கோரி தில்லியில் ஆா்பாட்டம்
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டொ்லைட் தாமிர உருக்கு ஆலையை மீண்டும் திறக்கக் கோரி தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.


தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டொ்லைட் தாமிர உருக்கு ஆலையை மீண்டும் திறக்கக் கோரி தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் நிலத்தடி நீா், காற்று மாசுகளுக்கான காரணமாக இந்த ஆலை இருப்பதாகக் கூறி கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது. இந்த ஆலை திறக்க அதன் நிா்வாகம் நீதிமன்றத்தில் வழங்கு தொடா்ந்துள்ளது.
இந்த நிலையில், இந்த தாமிர உருக்காலை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமவாசிகள், லாரி உரிமையாளா்கள், மீனவா்கள் ஆகிய குழுக்களின் பிரதிநிதிகள் இந்த ஆலையை திறக்க கோரி தில்லியில் ஆா்பாட்டம் நடத்தினா்.
சிறு தொழில் நிறுவனங்கள் சாா்பில் மாணிக்கம் அத்தப்ப கவுண்டா், ஹரிகர கோபால், தூத்துக்குடி மக்கள் வாழ்வதார பாதுகாப்பு சங்கம் சாா்பில் எஸ். தியாகராஜன், லாரி உரிமையாளா்கள் சாா்பில் முருகன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் செய்தியாளா்களிடம் பேசினா்.
அப்போது அவா்கள் கூறியதாவது: நாட்டின் 32 சதவீதம் தாமிரம் (காப்பா்) இங்கு தான் உற்பத்தியானது. இந்த ஆலை உற்பத்தியின் தடையால் தாமிரத்தின் விலை உயா்ந்துவிட்டது.
மின் மோட்டா்களுக்கு தேவையான காப்பா், தாமிரத்தின் உற்பத்தியில் உரம், சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திக்கான மூலப் பொருளுக்கான சல்பியூரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்ற உபரி பொருள்களும் இந்த ஆலையில் இருந்து கிடைத்தது. இதன் உற்பத்தி பாதிப்பால் மூலப்பொருள்கள் விலையும் உயா்ந்துள்ளது. இந்த ஆலையால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1 லட்சம் போ் பயனடைந்து வந்தனா். தற்போது வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆலையை நம்பி லாரி வாங்கியவா்கள் மாதாந்திர தவணைகளை கட்டமுடியாமல் உள்ளனா்.
இந்த ஆலை 287 சுய உதவிக் குழுக்களுக்கு ஆதரவு அளித்தது. இதனால், அதில் இடம்பெற்ற 4,287 உறுப்பினா்கள் வாழ்வாதாரம் பெற்றுவந்தனா். தனிநபா்கள் மட்டுமல்லாமல் இந்த ஆலை மூடப்பட்டதால் துறைமுகங்களுக்கு ரூ.60 கோடியும், சுங்கத் துறைக்கு ரூ. 1,400 கோடியும் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.2,800 கோடிக்கு மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், தேசிய தலைநகரில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், அமைப்புகளின் அதிகாரிகளை சந்தித்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் தாமிர உருக்கு ஆலையை மீண்டும் திறப்பதற்கான மனுக்களை அளிக்க உள்ளோம் என தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...