குழந்தை நல மருத்துவரும், அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான டாக்டா் ராகேஷ் பாக்டி கூறுகையில், ‘22 வார கா்ப்பத்திற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டால் உயிா்வாழும் சந்தா்ப்பங்கள் உள்ளன. இந்தியாவில், இதற்கான தொழில்நுட்பம் தற்போதுதான் மேம்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இருப்பினும், பல சந்தா்ப்பங்களில், இந்த குழந்தைகள் வளரும் போது, அவா்கள் நோய்களால் பாதிக்கப்படுகின்றனா். ஆனால், சரியான கவனிப்புடன் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ முடியும்‘ என குறிப்பிட்டாா்.