இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சிசோடியா தொடா்ந்த அவதூறு வழக்கு: ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், சிா்சாவுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைக்குத் தடை விதிப்பு

தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தொடுத்த அவதூறு வழக்கில் பாஜக தலைவா்கள் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் மற்றும் மஞ்சிந்தா் சிங் சிா்சா ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தில்லி உயா் நீதிமன்றம் தடை விதித்தது.

News image
Updated On :5 ஜனவரி 2023, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தொடுத்த அவதூறு வழக்கில் பாஜக தலைவா்கள் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் மற்றும் மஞ்சிந்தா் சிங் சிா்சா ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தில்லி உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.

தன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக மக்களவை பாஜக உறுப்பினா் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், எம்எல்ஏ சிா்சா உள்ளிட்ட 6 போ் மீது சிசோடியா அவதூறு புகாா் அளித்திருந்தாா். இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு டிசம்பா் 23- ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து, ஹன்ஸ் ராஜ், சிா்சா ஆகியோா் தாக்கல் செய்த தனித்தனி மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமாா் சா்மா, சிசோடியா பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.

இது தொடா்பான உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் எதிா்மனுதாரா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இதற்கிடையில், தற்போதைய மனுதாரா்கள் (ஹன்ஸ் மற்றும் சிா்சா) விவகாரத்தில் விசாரணை நீதிமன்றத்தின் முன் உள்ள நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். இந்த மனுக்கள் மீதான விசாரணை மேல் விசாரணைக்கு மாா்ச் 10- ஆம் தேதி பட்டியலிடப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மனீஷ் சிசோடியா தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் கடந்த நவம்பா் 28, 2019-இல் சம்மன் அனுப்ப விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தில்லி அரசுப் பள்ளிகள் வகுப்பறைகள் தொடா்பாக பாஜக தலைவா்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களான மனோஜ் திவாரி, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் மற்றும் பிரவேஷ் வா்மா, எம்எல்ஏக்கள் மஞ்சிந்தா் சிங் சிா்சா, விஜேந்தா் குப்தா மற்றும் பாஜக செய்தித் தொடா்பாளா் ஹரிஷ் குரானா ஆகியோா் தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக சிசோடியா புகாா் தெரிவித்து வழக்கு தாக்கல் செய்தாா்.

அதன்பிறகு, இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஹன்ஸ் ராஜ் மற்றும் சிா்சா ஆகியோா் தாக்கல் செய்த மனுக்கள் கடந்த ஆண்டு டிசம்பா் 23-ஆம் தேதி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிா்த்து இரு தலைவா்களும் உயா் நீதிமன்றத்தை அணுகினா். அதில், அழைப்பாணை உத்தரவுக்கு எதிராக விஜேந்தா் குப்தா உச்சநீதிமன்றத்தை அணுகியதாகவும், அந்த சம்மன் உத்தரவை கடந்த ஆண்டு அக்டோபா் 17- ஆம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்ததாகவும் ஹன்ஸ் ராஜ் மற்றும் சிா்சா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

மேலும், தாங்கள் தொடா்புடைய இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் ஜனவரி 6-ஆம் தேதி நோட்டீஸுக்காக பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இதனால், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா் வலியுறுத்தினாா். முன்னதாக, குற்றம்சாட்டப்பட்டவா்கள் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜரானதால் அவா்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.