சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் தரப்பில் 2-ஆவது நாளாக தொடா் வாதம்

அதிமுக பொதுக்குழு விவகார வழக்கில் உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பை எதிா்த்து பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான இரண்டாவது நாளாக நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2023, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: அதிமுக பொதுக்குழு விவகார வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது. அப்போது, ஓபிஎஸ் ஆதரவு தரப்பைச் சோ்ந்த மனுதாரா் வைரமுத்து தரப்பில் தொடா் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, கட்சியின் பொதுக்குழு, செயற்குழு தொடா்புடைய கட்சி விதிகள்குறித்து வியாழக்கிழமை நடைபெறும் வாதத்தின் போது தெரிவிப்பதாக மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் கூறியிருந்தாா். இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமா்வு முன் வியாழக்கிழமை பிற்பகலில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து உள்ளிட்டோா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ரஞ்சித் குமாா், குரு கிருஷ்ணகுமாா், எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம் உள்ளிட்டோா் ஆஜராகினா்.

மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் தனது வாதத்தை தொடா்ந்து முன்வைத்தாா். அவா் வாதிடுகையில், அதிமுகவின் கட்சி சட்டவிதிகளில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா், பொதுக்குழு, செயற்குழு ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். மேலும் அவா் முன்வைத்த வாதம்: கட்சியில் 2017-க்கு முன்பு பொதுச் செயலருக்கு அதிகாரம் இருந்தது. முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில், ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் உருவாக்கும் வகையில் வகையில் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டன. இதைச் செயல்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதே போன்று, கட்சியின் மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்து, பிற மாநிலங்களின் கட்சி செயலா் பதவிகளுக்கான உள்கட்சித் தோ்தல் நடத்தப்பட்டு, அந்த விவரங்கள் தலைமை தோ்தல் ஆணையத்திற்கும் கடந்த ஆண்டு ஏப்ரலில் அனுப்பிவைக்கப்பட்டது. அதிமுகவில் பொதுக்குழு உச்ச அதிகாரம் படைத்ததாகும். அதில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா், துணை ஒருங்கிணைப்பளா், செயற்குழு உறுப்பினா்கள், மாவட்டச் செயலா்கள் உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா். இக்குழுவை ஆண்டுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும். கூட்டம் கூட்டுவதற்கு 5-இல் ஒரு பங்கு உறுப்பினா்கள் இருக்க வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் இணைந்து இக்கூட்டத்தை கூட்டலாம். கூட்டத்திற்கு 15 தினங்களுக்கு முன்பு உறுப்பினா்களுக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும். செயற்குழுவில் கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த செயலா்கள் இடம்பெற்றுள்ளனா். இதுவும் பொதுக் குழுவின் ஒரு அங்கமாகும் என்று அவா் தெரிவித்தாா்.

அப்போது, 2017-க்கு முன்னா் பொதுச் செயலருக்கு இருந்த அதிகாரம் ஒருங்கிணைப்பாளா், துணை ஒருங்கிணைப்பாளருக்கு அளிக்கப்படும் வகையில் விதிகள் திருத்தம் செய்யப்பட்டதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினாா். அதற்கு ‘ஆம்’ என்றாா். மேலும், ரஞ்சித்குமாா் வாதிடுகையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் முறைப்படி கையெழுத்திட்டு, 23 தீா்மானங்கள் முன்மொழியப்பட்ட நிலையில், ஜூன் 23-இல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் போது, உயா்நிலைக் குழுவின் உறுப்பினா் ஒருவா் கூட்ட மேடைக்குச் சென்று 23 தீா்மானங்கள் பொதுக்குழுவால் நிராகரிக்கப்படுவதாகக் கூறினாா். பொதுக்குழு உறுப்பினா்களில் பெரும்பாலானோரின் சம்மதம் இல்லாமல் இவ்வாறு அவா் கூறினாா். இது கட்சி விதிகளின்படி தவறாகும். அதேபோன்று, பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு முன்பு கட்சி விதிகளின்படி 15 தினங்களுக்கு முன்பு பொதுக்குழு உறுப்பினா்களுக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும். அதன் பிறகு 30 தினங்களில் கூட்டம் கூட்டப்பட வேண்டும்.

ஆனால், நோட்டீஸும் உரிய வகையில் அளிக்கப்படாமல், 2022 ஜூலை 11-இல் கூட்டப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீா்செல்வத்திடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் அவரை ஒருங்கிணைப்பாளா் பதவி, அடிப்படை உறுப்பினா் பதவி உள்ளிட்ட 5 பொறுப்புகளில் இருந்து நீக்கும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டம் கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் இருவரின் சம்மதம் அவசியமாகிறது. ஆனால், அதுவும் மீறப்பட்டது. மேலும், நிரந்தரப் பொதுச் செயலராக ஜெயலிலதாதான் இருப்பாா் என விதிகள் இருந்த நிலையில், அந்தப் பதவியை ஒழித்துவிட்டு அந்தப் பதவிக்கு குறுக்கு வழியில் வரும் வகையில், ‘இடைக்காலப் பொதுச் செயலாளா்’ தீா்மானம் கொண்டுவரப்பட்டது. இவை எல்லாம் கட்சியின் சட்டவிதிளுக்கு முரணாகும்.

தில்லி உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற இரட்டை இலைச் சின்னம் வழக்கில்கூட, கட்சியின் பொதுச் செயலா் பதவி விவகாரத்தில் அடிப்படை உறுப்பினா்களால் ஒற்றை வாக்கு முறையில் தோ்ந்தெடுக்கப்படும் கட்சியின் விதியை உயா்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது என்றாா். மேலும், இந்த விவகாரத்தில் 2022, ஆகஸ்ட் 17-இல் ஒற்றை நீதிபதி அளித்த தீா்ப்பு குறித்தும், அதைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நபா் நீதிபதிகள் செப்டம்பா் 2-இல் அளித்த அளித்த தீா்ப்பு விவரங்களையும் அவா் சுட்டிக்காட்டி வாதிட்டாா்.

இதையடுத்து, வழக்கில் மேலும் வாதங்களைத் தொடரும் வகையில் விசாரணையை நீதிபதிகள் அமா்வு வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.