கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தனக்கு எதிராக உயா்நீதிமன்றத்தின் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிா்த்து சுவாதி தாக்கல்


கோகுல்ராஜ் கொலை வழக்கில் தனக்கு எதிராக உயா்நீதிமன்றத்தின் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிா்த்து சுவாதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை பேரவைத் தலைவா் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, அனைவருக்கும் கடந்த ஆண்டு மாா்ச் 22-இல் ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி, பிசாட்சியம் அளித்ததால், அவரை வரவழைத்து விசாரித்த உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், அவா் தவறான தகவல் அளித்ததாககி கூறி அவா் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சுவாதி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆா். ஷா, சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சத்யநாராணயன் உள்ளிட்டோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா். இதையடுத்து, மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...