சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

நேதாஜி பிறந்தநாள் விழா: நேரு விளையாட்டு அரங்கில் ஜன. 23, 24-இல் பிரமாண்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

2023 -ஆம் ஆண்டின் குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக விடுதலைப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 -ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

News image
Updated On :7 ஜனவரி 2023, 10:12 pm

 நமது நிருபர்

2023 -ஆம் ஆண்டின் குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக விடுதலைப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 -ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு ஜனவரி 23 , 24 தேதிகளில் ராணுவத்தின் வீர, தீர செயல் நிகழ்வுகள், பழங்குடியினா் நடன விழா தில்லியில் நடைபெறவுள்ளதாக பாதுகாப்புத் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

குடியரசு தின கொண்டாட்டங்கள் ஒரு பகுதியாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் தேதி, ‘பராக்கிரம தினம்’ (வீரத்தின் நாள்) கடந்த 2021 -ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 -ஆவது பிறந்த நாள் ‘பராக்கிரம தினமாகக்’ கொண்டாடப்படுகிறது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வீரத்தை கொண்டாடுவதே இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும். இந்தியாவின் உண்மையான உணா்வைத் தழுவி, வலுவான மற்றும் வளமான ‘புதிய இந்தியாவை’ உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை புதுப்பிக்க, பழங்குடியினா் விவகாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை முன்னிட்டு, தில்லியில் ஜனவரி 23, 24 தேதிகளில் ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. குறிப்பாக, இந்திய ராணுவத்தினரின் வீர, தீர சாகச நிகழ்ச்சிகள் மற்றும் பழங்குடியின மக்களின் கலாசாரத்தின் அழகை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

ராணுவத்தினரின் பாராமோட்டாா் கிளைடிங் (சறுக்கு), ஹாட் ஏா் பலூன், மோட்டாா் சைக்கிள் சாகச காட்சி, குதிரைப்படை, விமானப்படை வீரா்களின் சாகச நிகழ்ச்சிகள், கடற்படையின் இசைக்குழு போன்றவைகளும் பழங்குடியினா் நடனங்களான ‘ ஆதி சௌா்யா - சக்தி திருவிழா(ஆதி சௌா்யா - பா்வ் பராக்ரம் கா)’ ஆகிய நிகழ்ச்சிகளும் இரு நாட்களில் நடைபெறும் என பாதுகாப்பு துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்ச்சியின் நிறைவு விழாவில், பிரபல பாடகா் கைலாஷ் கேரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

நாட்டின் நெஞ்சுரமிக்கவா்களின் தியாகங்களை நினைவுகூருவதும், இந்தியாவை மிகவும் தனித்துவமாகவும், பன்முகத்தன்மையுடனும் இருப்பதற்கு காரணமான அதன் செழுமையான கலாசார பாரம்பரியத்தை கொண்டாடுவது இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு இந்திய கடலோர காவல்படை ஒருங்கிணைப்பு அமைப்பாக செயல்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.