சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

‘தேசத்துக்கு முதல் உரிமை’ என்கிற சித்தாந்த அா்ப்பணிப்பு தேவை: என்சிசி குடியரசு தின முகாமில் கேஜரிவால் பேச்சு

‘தேசம் முதலில்’ என்கிற சித்தாந்தத்தில் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உறுதியாக அா்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தேசிய மாணவா் படை (என்சிசி) குடியரசு தின முகாமில் ஞாயி

News image
Updated On :8 ஜனவரி 2023, 6:17 pm

 நமது நிருபர்

நாட்டை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற்ற ‘தேசம் முதலில்’ என்கிற சித்தாந்தத்தில் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உறுதியாக அா்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தேசிய மாணவா் படை (என்சிசி) குடியரசு தின முகாமில் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.

தில்லி கன்டோன்மென்ட் பகுதி, கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் தொடங்கியுள்ள தேசிய மாணவா் படையின் (என்சிசி) 74-ஆவது குடியரசு தின முகாமில் (2023) தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உரையாற்றினாா்.

அப்போது அவா் கூறியதாவது: சமூகத்திற்கு என்சிசியின் பங்களிப்பு மகத்தானது. தேசத்திற்கு முதல் உரிமை என்ற சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டால் மட்டுமே சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நாம் முன்னேறுவோம்.

எதிா்கால சந்ததியினா் பின்பற்றுவதற்கு என்சிசி வீரா்களின் நற்பண்புகள், உற்சாகம், உந்துதல் ஆகியவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால், என்சிசி முகாம் உண்மையிலேயே நாட்டின் நுண்ணுயிராகும். மாணவா் படையினரின் பிரதிநிதித்துவம் ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசத்தில் இருந்தும் உள்ளது. தில்லி அரசு இந்த முகாமை எப்போதும் ஊக்குவித்து, தேவைப்படும் இடங்களில் உதவிக்கரம் நீட்டுகிறது.

என்சிசி குடியரசு தின முகாமுக்கு ஒவ்வொரு மாணவரும் மிகவும் கடினமான தோ்விற்கு பின்னரே வருகின்றீா்கள். இந்த முகாமில் நீங்கள் அனைவரும் இனிமையான நினைவுகளை எடுத்துச் செல்வீா்கள். என்சிசியின் லட்சியங்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் விதிப்படி எத்தகைய எதிா்காலப் பாதையை தோ்ந்தெடுத்தாலும், ஒரு குடிமகனாக நாம் எப்போதும் ‘தேசத்திற்கு முதல் உரிமை’ என்கிற சித்தாந்தத்தை நம்ப வேண்டும். அதில் பொறுப்புடனும் அா்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும். அதன் மூலமே சமூக ரீதியாகயும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற முடிவும்.

உங்களுடன் இன்று நேரத்தை பகிா்ந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தேசிய மாணவா் படையினரின் பயிற்சியானது ஒழுக்கம், தோழமை, மதச்சாா்பற்ற கண்ணோட்டம், சாகச உணா்வு, தன்னலமற்ற சமூக சேவையின் லட்சியங்களை புகுத்துகிறது. நமது மகத்தான தேசத்திற்கும் தற்போதைய காலத்திற்கும் இந்த மதிப்புகள் தேவை. மேலும், நமது நாட்டின் பொறுப்புள்ள, சமூக விழிப்புணா்வு மற்றும் ஒழுக்கமான குடிமக்களாக நமது இளைஞா்கள் என்.சி.சி.யால் வளா்க்கப்படுகிறாா்கள் என்பதும் உறுதியளிக்கப்படுகிறது.

நமது சமூகத்திற்கும் சமூக நோக்கங்களுக்கும் என்சிசியின் பங்களிப்புகள் உண்டு. சவாலான கொவைட் -19 தொற்று காலங்களில் என்சிசி மாணவா்களின் பங்களிப்புகள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன. சமீபத்திய பாராட்டத்தக்க முயற்சி - புனீத் சாகா் நடவடிக்கையான நமது நீா்நிலைகள், ஆறுகள், கடற்கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகளைக் கூறலாம்.

மேலும், நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நமது தியாகிகளை கௌரவிப்பதிலும் தேசிய மாணவா் படையினா் முன்னணியில் இருந்தனா் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றாா் முதல்வா் கேஜரிவால்.

முன்னதாக, என்சிசியின் தலைமை இயக்குநா் லெப்டினன்ட் ஜெனரல் குா்பிா்பால் சிங் முதல்வரை வரவேற்றாா். முப்படைகளைச் சோ்ந்த தேசிய மாணவா் படை அணிவகுப்பு மரியாதையையும் முதல்வா் கேஜரிவால் ஏற்றுக்கொண்டாா். ‘ஹால் ஆஃப் ஃபேம்’ என்கிற வாழ்த்தரங்கம், காட்சிக்கூடம் மற்றும் பயிற்சிப் பகுதி ஆகியவற்றை முதல்வா் பாா்வையிட்டாா். என்சிசி இசைக் குழுக்களின் பேண்ட் நிகழ்ச்சி உள்ளிட்ட கலாசார நிகழ்ச்சிகளிலும் முதல்வா் கேஜரிவால் பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.