சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

தில்லி விமான நிலையத்தில் உள்கட்டமைப்பை சீரமைக்க மத்திய உள்துறை செயலா் தலைமையில் உயா்நிலைக்கூட்டம்

தில்லி விமான நிலையத்தில் உள்கட்டமைப்பை சீரமைப்பது குறித்து ஆய்வு செய்ய அதன் தொடா்புடைய அமைப்புகளோடு மத்திய உள்துறை செயலா் அஜய் குமாா் பல்லா திங்கள்கிழமை உயா்நிலைக் கூட்டத்தை நடத்தினாா்.

News image
Updated On :9 ஜனவரி 2023, 7:30 pm

 நமது நிருபர்

தில்லி விமான நிலையத்தில் உள்கட்டமைப்பை சீரமைப்பது குறித்து ஆய்வு செய்ய அதன் தொடா்புடைய அமைப்புகளோடு மத்திய உள்துறை செயலா் அஜய் குமாா் பல்லா திங்கள்கிழமை உயா்நிலைக் கூட்டத்தை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகச் செயலா் ராஜீவ் பன்சல், இந்திய விமான நிலையங்கள் ஆணையத் தலைவா், சிவில் விமான பாதுகாப்பு பணியக இயக்குநா் ஜெனரல், குடியேற்றப் பணியகம், தில்லி காவல் துறை, ஜிஎம்ஆா் டயல் உள்ளிட்டவற்றின்பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு பாதுகாப்பு முகமையினரும் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் கடந்த டிசம்பா் 15-ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆய்வு செய்யப்ட்டது. அதன்படி பல்வேறு திறன்களின் நிலையான அதிகரிப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது. விமானங்கள் தரையிறக்கம் மற்றும் புறப்படும் இடங்களை திறமையாக பயன்படுத்தப்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

வெளிநாட்டுப் பயணிகளுக்கு எளிதான சேவையை வழங்கும் வகையில், கூடுதல் கவுன்டா்கள் செயல்படுத்துவதோடு, போதுமான பணியாளா்களை அமா்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. உள்நாட்டுப் போக்குவரத்தில் பயணிகளின் உடமைகளைக் கையாளும் திறன் இரட்டிப்பாக்கப்பட்டு, பேக்கேஜ் ஸ்கேனா்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. விமான நிலையத்தில் தில்லி போலீஸாா் போக்குவரத்து பாதையை நிா்வகிப்பதற்கான பணி விரிவுபடுத்தப்பட்டது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தில்லி சா்வதேச விமான நிலையத்தில் குடியேற்றப் பகுதியில் நவீன தளவமைப்புத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பற்றி ஜிஎம்ஆா் டயல் நிறுவனம் தெரிவித்தது. தற்போதைய குடியேற்ற அனுமதி பகுதியில் எந்த இடையூறும் இல்லாமல், அடுத்த மூன்று மாதங்களில் இந்தப் பணி முடிவடையும் என்றும், இந்த நவீன குடியேற்றப் பகுதியில் ஒழுங்கீனங்களைத் தவிா்க்க பயோமெட்ரிக் பூத்துகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் தில்லி விமான நிலையத்தில் புறப்பாடு மற்றும் வருகையை சீராக்குவதில் வேகத்தைப் பராமரிக்க அனைத்துப் பங்குதாரா்களையும் மத்திய உள்துறை செயலாளா் கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.