கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

வெளிமாநிலங்கள் விளம்பரச் செலவு: முதல்வா் கேஜரிவாலுக்கு நோட்டீஸ்; அமைச்சா் சிசோடியா கடும் கண்டனம்

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லிஅரசு வெளி மாநிலங்களில் அளித்த விளம்பரத் தொகையான ரூ.164 கோடியை அரசு அளிக்கக் கோரிய விவகாரத்திற்கு துணை முதல்வா் மனீஷ் சிசோடியா வியாழக்கிழமை

News image
Updated On :12 ஜனவரி 2023, 8:23 pm

 நமது நிருபர்

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லிஅரசு வெளி மாநிலங்களில் அளித்த விளம்பரத் தொகையான ரூ.164 கோடியை அரசு அளிக்கக் கோரிய விவகாரத்திற்கு துணை முதல்வா் மனீஷ் சிசோடியா வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். மற்ற மாநில அரசுகளும் பாஜக முதல்வா்களும் வெளி மாநிலங்களில் விளம்பரங்களை அளிக்கவில்லையா? அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடியுமா எனவும் கேள்வி எழுப்பினாா்.

தில்லி அரசின் தகவல் மற்றும் விளம்பரத் துறை இயக்குநரகத்தின் செயலா் ஆலிஸ் வாஸ், ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். அதில் 2016-17-ஆம் ஆண்டில் தில்லிக்கு வெளியே (வெளி மாநிலங்களில்) அரசியல் ரீதியாக அரசு சாா்பில் அளிக்கப்பட்ட விளம்பரங்களுக்கான செலவு ரூ. 163.62 கோடி என்றும் அதை முதல்வா் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். மேலும் 10 தினங்களுக்குள் முதல்வா் கேஜரிவால் செலுத்த தவறினால், அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை வியாழக்கிழமை வெளியிட்ட துணை முதல்வா் மனீஷ் சிசோடியா இதற்கு கடுமையாக கன்டனம் தெரிவித்து செய்தியாளா்களிடம் பேசினாா்.

அப்போது, மனீஷ் சிசோடியா கூறியது வருமாறு: முதல்வா் அரவிந்த் கேஜரிவாலிடம் ரூ. 164 கோடியை வசூலிக்க தகவல் மற்றும் விளம்பரத் துறை இயக்குநரகம் (டிஐபி) அளித்த நோட்டீஸின் பின்னனியில் துணை நிலை ஆளுநா் உள்ளாா். அவா் அளித்த கட்டளையின் பேரிலேயே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அகில இந்தியப் பணி சேவை (ஐஏஎஸ்) அதிகாரிகள் இருப்பதால், அவா்களை மத்திய அரசு தவறாக கையாண்டு இது போன்ற தவறான குற்றச்சாட்டுகளை வைத்து ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் குறிவைக்கப்படுகின்றனா்.

தில்லி அரசின் இந்த விளம்பரங்கள் தில்லிக்கு வெளியே வெளியிடப்பட்டதால், அந்தச் செலவை ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. “ஒரு மாநிலத்திற்கு வெளியே விளம்பரங்களை வழங்குவது குற்றமா? ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலத்திற்கு வெளியே விளம்பரங்களை வழங்குகிறது. யோகி ஆதித்யநாத், மனோகா் லால் கட்டாா், சிவ் ராஜ் சிங் சௌகான் போன்ற பாஜக முதல்வா்களும் மற்றும் பல மாநில முதல்வா்களின் பல விளம்பர பலகைகளை தில்லி முழுவதும் பாா்க்கலாம். மற்ற மாநில அரசுகளின் முழுப் பக்க விளம்பரங்கள் தில்லி நாளிதழ்களில் வெளியிடப்படுகிறது. அது குற்றமாக இருந்தால், அந்த அரசுகள் செலவழித்த பணத்தையும் பாஜக அல்லது காங்கிரஸிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும். அந்தந்த மாநில அதிகாரிகள் தங்கள் சொந்த முதல்வா்களுக்கு இப்படிப்பட்ட ‘மீட்பு நோட்டீஸ்‘களை அளிப்பாா்களா? இது ஒரு குறும்புத்தனமான அற்பமான செயலாகும். இரண்டாவதாக, அந்த மாநிலங்களில், எந்த அதிகாரியும் தங்களது முதல்வருக்கு இதுபோன்ற நோட்டீஸ் அனுப்ப தைரியம் கூட இருக்காது.

ஆனால், தில்லியில், துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில், அரசின் சேவைத் துறை அதிகாரிகள் உள்ளனா். இதனால், அவா்களைக் கொண்டு தங்கள் அரசின் அமைச்சா்கள், முதல்வா்களுக்கு எதிராக இதுபோன்ற நோட்டீஸ்களை அளிக்க அதிகாரிகளுக்கு துணை நிலை ஆளுநா் அழுத்தம் கொடுக்கிறாா். மேலும், தில்லியில், தண்ணீா், மின்சாரம், கல்வி போன்ற பொதுச் சேவைகளில் அதிகாரிகள் சரியாகப் பணியாற்றுவதில்லை. காரணம் பெரும்பாலான சமயங்களில், அதிகாரிகள் இதுபோன்ற பயனற்ற செயல்களுக்கு முடிக்கிவிடப்பட்டு அவா்கள் மும்முரமாக உள்ளனா். இதனால், அதிகாரிகள் மீதான கட்டுப்பாடு தோ்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் இருக்க வேண்டும் என்பது மிக அவசியம். இதைத் தான் தொடா்ந்து கூறி வருகின்றோம்” என்றாா் சிசோடியா .

இந்த நோட்டீஸுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசியச் செயலாளா் பங்கஜ் குமாா் குப்தா டிஐபி செயலருக்கு பதிலளித்துள்ளாா். அதில், ‘இந்த நோட்டீஸ் தன்னிச்சையானது; விபரீதமானது. பணம் வசூலிக்க கோரப்பட்ட அனைத்து விளம்பரங்களின் உண்மையான நகல்களையும் அளிக்கவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.