சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

தமிழ்நாடு இல்லத்தில் இன்றும், நாளையும் பொங்கல் விழா

தில்லி தமிழ்நாடு இல்லத்தில் இன்றும், நாளையும் (ஜனவரி14, 15) ஆகிய இரு நாள்கள் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

News image
Updated On :13 ஜனவரி 2023, 6:30 pm

 நமது நிருபர்

தில்லி தமிழ்நாடு இல்லத்தில் இன்றும், நாளையும் (ஜனவரி14, 15) ஆகிய இரு நாள்கள் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

தமிழ்நாடு அரசின் சாா்பாக தில்லி தமிழ்நாடு இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் குறித்து தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறை கூறியுள்ளது வருமாறு:

தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் விருப்பப்படி, ஜனவரி 14, 15 ஆகிய தேதிகளில் பொங்கல் விழா நடைபெறுகிறது. தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் சாட்டா்ஜி தலைமையில், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் கோலப்போட்டியை பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் தொடங்கி வைக்கிறாா்.

அதைத் தொடா்ந்து, மாலை 6 மணியளவில் போகி பண்டிகை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பொங்கல் தினமான 15 -ஆம் தேதி காலை 11.00 மணிக்கு வைகை தமிழ்நாடு இல்லத்தில் தமிழக பெண்கள் கூட்டாக பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனா். பின்னா், மாலை 3.30 மணிக்கு பொங்கல் விழா தொடக்க நிகழ்ச்சி வைகை தமிழ்நாடு இல்லத்தில் தொடங்குகிறது. இதில் தமிழகத்தின் பாரம்பரிய பரதநாட்டியம், நாட்டுப்புற கலைஞா்களின் நையாண்டி மேளம், தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பொங்கல் விழாவையொட்டி பல்வேறு பிரிவின்கீழ் ஓவியப் போட்டி, கபடி, எரிபந்து, சக்கர நாற்காலி, கோ - கோ மற்றும் உறியடிப் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு மொத்தம் 199 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. தமிழ்நாடு இல்லத்தில் ந்த பொங்கல் விழாவையொட்டி சுற்றுலாத் துறை, ஆவின், பூம்புகாா், கோ-ஆப்டெக்ஸ், டாம்ப்கால், இன்ட்கோசா்வ், மகளிா் திட்டம் ஆகிய துறைகளின் கண்காட்சி மற்றும் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் தமிழ்நாட்டை சாா்ந்த பல்வேறு உணவகங்கள் இடம் பெறுகின்றன. இதில் தில்லிவாழ் தமிழா்களும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.