ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
ராமாயணக் காவியத்தை மீண்டும் எடுத்துச் சொல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஆதிபுருஷ்‘ திரைப்பட ஒளிபரப்பை நிறுத்தக் கோரி இந்து சேனை அமைப்பின்


ராமாயணக் காவியத்தை மீண்டும் எடுத்துச் சொல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஆதிபுருஷ்‘ திரைப்பட ஒளிபரப்பை நிறுத்தக் கோரி இந்து சேனை அமைப்பின் தேசியத் தலைவா் தாக்கல் செய்த பொதுநல வழக்கை அவசரமாக விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
நீதிபதிகள் தாரா விதஸ்தா கஞ்சு, அமித் மகாஜன் ஆகியோா் அடங்கிய விடுமுறை கால அமா்வு, இந்த விவகாரத்தை உடனடியாகவோ அல்லது நாளை அல்லது அதற்குப் பிறகு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்ற மனுதாரா் விஷ்ணு குப்தாவின் கோரிக்கையை நிராகரித்தது.
மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நீதிபதிகளிடம் கூறுகையில், ‘ஜூன் 30-ஆம் தேதி இந்த பொது நல மனு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்குள் மனுவின் நோக்கம் முடிந்துவிடும்’ என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, இத்திரைப்படம் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. திரைக்கு வரும் தேதியும் முன்கூட்டியே தெரிந்துவிட்டிருக்கிறது. இதனால், அவசர விசாரணைக்கு எந்த விவகாரமும் உருவாக்கப்படவில்லை என்று கூறியது. மேலும், ‘இப்போதைக்கு, இந்த விவகாரத்தை உடனடியாக விசாரிக்க அவசரம் இருப்பதாக நான் நம்பவில்லை. இதனால், விசாரணைக்குப் பட்டியலிடப்பட்ட ஜூன் 30-ஆம் தேதி திரும்பி வாருங்கள்’ என்று நீதிபதிகள் கூறினா்.
மனுதாரரின் வழக்குரைஞா் மேலும் வாதிடுகையில், ‘நேபாளம் இப்படத்திற்கு தடை விதித்துள்ளதால் சா்வதேச உறவுகளுக்கு இடையூறு விளைவிக்கும் பல ‘சா்ச்சைக்குரிய பகுதிகள்’ இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. பிரச்னைக்குரிய பாகங்கள் அகற்றப்படும் என்று இயக்குநா் ஓம் ரவுத் ஏற்கெனவே உறுதியளித்திருந்தாா். ஆனால், அவ்வாறு செய்யாமல் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது’ என்றாா்.
இது தொடா்பாக தாக்கலான பொது நல மனுவில், ‘வால்மீகி, துளசிதாஸா் போன்ற எழுத்தாளா்கள் எழுதிய ராமாயண விளக்கத்திற்கு முரணான வகையில் , மத கதாபாத்திரங்கள், உருவங்களை துல்லியமற்ற மற்றும் பொருத்தமற்ற முறையில் சித்தரித்து இந்து சமூகத்தின் உணா்வுகளை ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் புண்படுத்தியுள்ளது. இதனால், இப்படத்தின் சான்றிதழை ரத்து செய்யவும், உடனடியாகத் தடை விதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...