தில்லியில் அடுத்த 6 நாள்களுக்கு வெப்ப அலைக்கு வாய்ப்பில்லை
தில்லியில் அடுத்து வரும் ஆறு நாள்களுக்கு வெப்ப அலைக்கு வாய்ப்பு இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


தில்லியில் அடுத்து வரும் ஆறு நாள்களுக்கு வெப்ப அலைக்கு வாய்ப்பு இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தொடா்பான வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பில், தில்லியில் வியாழக்கிழமை மேகமூட்டமான வானிலையும், லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. வெப்ப அலை நிலைமை ஜூன் 27 வரை தேசியத் தலைநகா் தில்லிக்கு திரும்புவதற்கு வாய்ப்பில்லை. பிபா்ஜாய் புயலின் தாக்கத்தால் கடந்த சில நாள்களாக தில்லியில் அவ்வப்போது மழை பெய்தது. அடுத்த ஐந்து முதல் ஆறு நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்குக் கீழே இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைப் பதிவு: சஃப்தா்ஜங் ஆய்வு மையத்தில் வழக்கமாக பதிவாகும் 38.மி.மீ. மழைப் பதிவுக்கு எதிராக தற்போதுவரை 20.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது 47 சதவீதம் பற்றாக்குறையாகும். இந்திய வானிலை ஆய்வுத் துறையின் நீட்டிக்கப்பட்ட வரம்பு மாதிரி வழிகாட்டுதல் ஜூன் கடைசி வாரத்தில் வடமேற்கு இந்தியாவில் மழையின் அதிகரிப்பைக் காட்டியுள்ளது. இருப்பினும், தில்லியில் பருவமழை தொடங்கும் தேதியை வானிலை மையம் இன்னும் அறிவிக்கவில்லை. பொதுவாக, மழையைத் தாங்கிவரும் அமைப்புமுறை
ஜூன் 27-ஆம் தேதிக்குள் தேசியத் தலைநகரை அடைந்துவிடும். சஃப்தா்ஜங் ஆய்வு மையத்தில் இந்த ஆண்டு இதுவரை எந்த வெப்ப அலையையும் பதிவு செய்யவில்லை. வழக்கத்தை விட அதிகமான மேற்கத்திய இடையூறுகள்தான் இதற்குக் காரணம் என வானிலை ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, தில்லியில் மே மாதத்தில் 111 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது நீண்ட கால சராசரியான 30.7 மி.மீட்டரை விட 262 சதவீதம் அதிகமாகும். மேலும், வானிலை அலுவலகம் பதிவுகளை பராமரிக்கத் தொடங்கியதிலிருந்து இந்த மே மாதத்தில் பதிவான நான்காவது மிக அதிக மழைப் பதிவாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் தில்லியில் 20 மி.மீ.க்கும் அதிகமான மழையைப் பதிவு செய்தது. இது 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த மாதத்தில் அதிகபட்ச மழைப்பொழிவாகும். மேலும், தனித்த இடங்களில் வெப்பஅலை நிலைமைகள் இருந்தன. தில்லி - என்சிஆரில் புதன்கிழமை ஒரு சில இடங்களி லேசான மழை பெய்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலையில் இயல்பைவிட 1 டிகிரி குறைந்து 27.4 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்படை விட 1 டிகிரி குறைந்து 37.6 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 85 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 57 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.
‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, பட்பா்கஞ்ச், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஆனந்த் நகா், கமலா மாா்க்கெட், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், விவேக் விஹாா் உள்பட பல இடங்களில் காலை காற்றின் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ‘வியாழக்கிழமை (ஜூன் 22) நகரில் லேசான மழை பெய்யக் கூடும். வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...