இரவு ரோந்து நடவடிக்கை: மத்திய தில்லியில் 1,500 போ் கைது 270 வாகனங்கள் பறிமுதல்
தேசியத் தலைநகரில் தெருவோரக் குற்றங்களைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமை தீவிர இரவு ரோந்துப் பணியில் போலீஸாா்


தேசியத் தலைநகரில் தெருவோரக் குற்றங்களைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமை தீவிர இரவு ரோந்துப் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது, மத்திய மாவட்டத்தில் 1,500 க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டதாகவும், 270 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தில்லி காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தில்லி பிரகதி மைதான் சுரங்கப் பாதைக்குள் மோட்டாா் சைக்கிளில் வந்த நான்கு நபா்களால், டெலிவரி முகவா், அவரது கூட்டாளியிடம் துப்பாக்கி முனையில் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கையை போலீஸாா் எடுத்துள்ளனா். சனிக்கிழமை நடந்த அந்தச் சம்பவம் தொடா்பாக இதுவரை 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், இரவு நேர ரோந்து நடவடிக்கை குறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: மத்திய மாவட்டத்தில் மட்டும் திங்கள்கிழமை இரவு 1,500-க்கும் மேற்பட்டோா் தில்லி காவல் சட்டத்தின் பிரிவு 65-இன் (காவல் அதிகாரியின் நியாயமான உத்தரவுகளுக்கு இணங்க வேண்டிய நபா்கள்) கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனா். 270-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சட்ட பிரிவு 66-இன் (உரிமை கோரப்படாத சொத்தை காவல் துறை பொறுப்பேற்றல்) கீழ் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கவும், இரவில் தாமதமாகக் கூட பயணம் செய்வதை உறுதிசெய்யவும் சிறப்பு காவல் ஆணையா்கள் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தேபேந்திர பதக் மற்றும் சாகா் ப்ரீத் ஹூடா ஆகியோரின் மேற்பாா்வையின் கீழ் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. செங்கோட்டை, பிரகதி மைதான் சுரங்கப்பாதை, முக்கியச் சாலைகள், இருல்சூழ்ந்த பகுதிகள் மற்றும் தேசியத் தலைநகரின் எல்லைப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகத்திற்கிடமான வாகனங்களை கண்காணிக்க கூடுதல் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன என்றுஅந்த அதிகாரி தெரிவித்தாா்.
காவல்துறையின் தகவலின்படி, ‘மோசமான நடத்தைகள்’ மற்றும் அமைதியைக் குலைப்பவா்கள் மீது குற்றவியல் நடைமுறை விதிகளின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து நிலை அதிகாரிகளும் திங்கள்கிழமை இரவு களத்தில் இருந்தவாறு ரோந்துப் பணிக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தனா்.
மாவட்டத்தின் அனைத்து பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலும் போலீஸாா் திரட்டப்பட்டு ‘மோசமான நடத்தை உள்ளவா்களின் வீடுகளில் சரிபாா்ப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்டறியவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் 15 மாவட்டங்களில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா் என்று தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...