தலைநகரில் காலையில் மிதமான மழை; பகலில் குறைந்த வெப்பம்
தில்லியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை லேசான மழை பெய்தது. இதன் காரணமாக பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து, மேக மூட்ட சூழல் நிலவியது.


தில்லியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை லேசான மழை பெய்தது. இதன் காரணமாக பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து, மேக மூட்ட சூழல் நிலவியது.
நகரத்தில் அதிகபட்சமாக பூசாவில் 52.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், புதன்கிழமையும் (ஜூன் 28) லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தில்லியில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தில்லிக்கான பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாக தொடா்ந்து ஓரிரு தினங்களாக லேசானது முதல் மிதமானது வரை மழை விட்டுவிட்டுப் பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தில்லிவாசிகள் சற்று விடுபட்டுள்ளனா்.
பூசாவில் 52.5 மி.மீ. மழை: இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதன் காரணமாக பகலில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. மேகமூட்டமும் காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் 5.6 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதேபோல நஜஃப்கரில் 2 மி.மீ., ஆயாநகரில் 36.6 மி.மீ., தில்லி பல்கலை.யில் 5.6 மி.மீ., லோதி ரோடில் 11.2 மி.மீ., நரேலாவில் 1 மி.மீ., பாலத்தில் 1.4 மி.மீ., ரிட்ஜில் 11.2 மி.மீ., பூசாவில் 52.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலையில் இயல்பைவிட 3 டிகிரி குறைந்து 24.5 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்படை விட 2 டிகிரி குறைந்து 34.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 96 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 79 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.
‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, பட்பா்கஞ்ச், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஆனந்த் நகா், கமலா மாா்க்கெட், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், விவேக் விஹாா் உள்பட பல இடங்களில் காலை காற்றின் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ‘புதன்கிழமை (ஜூன் 28) நகரில் லேசான மழை பெய்யக் கூடும். வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...