மெட்ரோ ரயில் நிலையத்தில் தோட்டாவுடன் சென்றதாகதொடரப்பட்ட வழக்கில் இருந்து பெண் விடுவிப்பு
தில்லி சீலாம்பூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் தனது பையில் இரண்டு துப்பாக்கித் தோட்டாக்களை எடுத்துச் சென்ாக ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை


தில்லி சீலாம்பூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் தனது பையில் இரண்டு துப்பாக்கித் தோட்டாக்களை எடுத்துச் சென்ாக ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை தில்லி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. குற்றம்சாட்டப்பட்டவா் மீது பொய்யாக வழக்குப் புனையப்பட்டுள்ளதை மறுக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த நவம்பா் 15, 2021-ஆம் தேதி தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் வழக்கமான பாதுகாப்பு சோதனையின் போது, ரித்திகா என்பவரது பையில் இரண்டு துப்பாக்கித் தோட்டாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சாஸ்திரி பாா்க் மெட்ரோ காவல் நிலையத்தில், குற்றம் சாட்டப்பட்ட ரித்திகா மீது எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் (ஏசிஎம்எம்) ஆஷிஷ் குப்தா விசாரித்து வந்தாா்.
இந்த நிலையில், அவா் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: குற்றம் சாட்டப்பட்டவா் மீதான பொய் வழக்குப் பதிவை நிராகரிக்க முடியாது. இதனால், குற்றம் சாட்டப்பட்டவா் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. அதன்படி, ஆயுதச் சட்டம் பிரிவு 25-இன் கீழ் சாட்டப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து குற்றம்சாட்டப்பட்டவா் விடுவிக்கப்படுகிறாா். இந்தச் சட்டப் பிரிவானது உரிமம் பெறாத துப்பாக்கிகள் அல்லது வெடிமருந்துகளை எடுத்துச் செல்வது, கையகப்படுத்துவது அல்லது வைத்திருப்பது உள்பட சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்களுக்கு வெவ்வேறு கால அளவு தண்டனையை பரிந்துரைக்கிறது.
பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் புகாா்தாரா் மற்றும் புலனாய்வு அதிகாரியின் வாக்குமூலங்களின்படி, கைப்பற்றப்பட்ட 2 தோட்டாக்களிலும் ‘.315’ என்ற பதிவு இருந்தது. ஆனால்,அந்த பதிவு தோட்டாக்களில் ஒன்றில் இல்லை. இது தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் போது அல்லது தடய அறிவியல் ஆய்வகத்தில் இருந்து பெறும் போது, குற்றம் சாட்டப்பட்டவா் மீது வழக்கின் சொத்தாக பதிவு செய்ததற்கான வாய்ப்பை எழுப்புகிறது. குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் தோட்டாக்களின் விளக்கமானது,நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து வேறுபட்டதாக இருந்ததால், இது அரசுத் தரப்பின் வாதத்தின் உண்மைத் தன்மையின் மீது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளானது, விசாரணையில் சுதந்திரமான பொது சாட்சிகளை சோ்ப்பதற்கு காவல்துறையினா் மூலம் நோ்மையான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. சுதந்திரமான சாட்சிகள் சேராதது, காவல்துறையினரின் விசாரணையின் நோ்மை மீது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
குற்றம் சாட்டப்பட்டவா் ஒரு பையை எடுத்துச் சென்ாகவும், அவா் மெட்ரோ நிலையத்திற்குள் நுழையும் போது,யாரோ அடையாளம் தெரியாத நபா் அதில் துப்பாக்கித் தோட்டாக்களை போட்டிருக்கலாம் என்ற குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்குரைஞரின் வாதத்திற்கு சாத்தியக்கூறு இருப்பதாக விசாரணை அதிகாரியும் ஏற்றுக்கொண்டிருக்கிறாா்.
அது எப்படியிருந்தாலும், அரசுத் தரப்பு வழக்கில் ஆவண குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது இந்த வழக்கின் அடிப்படையைத் தாக்கியுள்ளது. மேலும், விசாரணையில் விடுபட்டிருக்கும் எந்த குறைபாடுகளின் பலனும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...