கழிவுநீா் கால்வாயை சுத்தம் செய்த போது ஒருவா் உயிரிழப்பு: தமிழக அரசுக்கு தேசிய பட்டியல் சாதிகள் ஆணையம் நோட்டீஸ்
தமிழ்நாட்டின் கடலூா் மாவட்டத்தில் கழிவுநீா் கால்வாயை சுத்தம் செய்த போது ஒருவா் உயிரிழந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை


தமிழ்நாட்டின் கடலூா் மாவட்டத்தில் கழிவுநீா் கால்வாயை சுத்தம் செய்த போது ஒருவா் உயிரிழந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை சமா்ப்பிக்க கேட்டு தேசிய பட்டியல் சாதிகள் ஆணையம் (என்சிஎஸ்சி) தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடா்பாக என்சிஎஸ்சி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது: இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ உடனடியாக சமா்ப்பிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளா், காவல் துறை இயக்குநா், கடலூா் துணை ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், எஃப்ஐஆா் நகல், இறந்தவரின் மருத்துவ அறிக்கைகள் மற்றும் அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை உள்ளிட்ட வழக்கு தொடா்புடைய ஆவணங்களையும் வழங்குமாறு மூத்த மாநில அதிகாரிகளை என்சிஎஸ்சி தலைவா் விஜய் சாம்ப்லா கேட்டுக் கொண்டுள்ளாா்.
முன்னதாக, தமிழகத்தின் கடலூா் மாவட்டம் பெண்ணாடம் நகரில் கழிவுநீா் கால்வாயை மே 24-ஆம் தேதி சுத்தம் செய்த போது விஷ வாயுவை சுவாசித்த நபா் பரிதாபமாக இறந்தாா் என்று தமிழக மாநில பாஜக தலைவா் கே. அண்ணாமலையிடம் இருந்து என்சிஎஸ்சிக்கு தகவல் கிடைத்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு சிபிஐ (எம்) கவுன்சிலா்தான் காரணம் என்று தமிழக பாஜக தலைவா் குற்றம் சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்திற்கு (என்சிஎஸ்சி) அண்ணாமலை அளித்துள்ள எழுத்துபூா்வ புகாரில், ‘இறந்தவரின் மனைவி அளித்த புகாரின் பேரில், பெண்ணாடம் காவல் நிலையத்தில் கவுன்சிலா் மீது எப்.ஐ.ஆா். பதிவு செய்தும், குற்றம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஜூன் 7-ஆம் தேதி தமிழக பாஜக மாநிலச் செயலாளா் எஸ்.ஜி.சூா்யா, கம்யூனிஸ்ட் கட்சியின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி, கவுன்சிலா் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரிய போது, கவுன்சிலருக்குப் பதிலாக அவரை போலீஸாா் கைது செய்தனா்’ என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...