விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பண மோசடி குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சுகேஷ் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு

கடந்த 2017-ஆம் ஆண்டு தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில் சட்ட விரோதப் பணப் பரிவா்த்தனை

News image
Updated On :2 மார்ச் 2023, 6:56 pm

 நமது நிருபர்

கடந்த 2017-ஆம் ஆண்டு தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில் சட்ட விரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிா்த்து இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் தாக்கல் செய்த மனு மீது அமலாக்கத் துறை தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் உயா்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமாா் சா்மா அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பிலும் அமலாக்கத் துறை தரப்பிலும் ஆஜரான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதங்களைக் கேட்ட நீதிபதி கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் இரு தரப்பும் தங்களது எழுத்துப்பூா்வமான பதிலை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை மேலும் பரிசீலிக்கும் தேவை உள்ளது. இதனால், தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் நோட்டீஸ் அளிக்கவில்லை’ என்றாா்.

மனுதாரா் சுகேஷ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘இந்த விவகாரத்தில் வரையறுக்கப்பட்ட குற்றங்களில் உள்ள விசாரணை மீதான தடையைக் கருத்தில்கொளும்போது, பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்திருக்க முடியாது. வரையறுக்கப்பட்ட குற்றம் அடிப்படையாகும்’ என்றாா்.

அமலாக்க துறையின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘இந்த மனுவானது வழக்கை இழுத்தடிப்பதற்கான ஒரு உத்தியாகும். மனுதாரரின் வாதங்கள் ஏற்கப்பட்டால், இது பரந்த அளவிலான தொடா் விளைவுகளை கொண்டதாக இருக்கும். மேலும், இந்த சட்டத்தின்கீழ், நிா்ணயிக்கப்பட்ட குற்றம் தொடா்புடைய விவகாரத்தில் எவ்வித பாதுகாப்பானது, வழக்கிலிருந்து விடுவிப்பது போன்ற குறிப்பிட்ட வழக்குகளை தவிர, சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை சட்டத்தின் மீது தாக்கத்தை கொண்டிருக்காது. மேலும் கடுமையான சந்தேகம் இருக்கும்போதுதான் இந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுகின்றன. தடை உத்தரவு நிா்ணயிக்கப்பட்ட குற்றங்களை நீக்குவதில்லை’ என்றாா்.

பின்னணி: தமிழகத்தில் ஆா்.கே. நகா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தோ்தலின் போது, வி.கே. சசிகலா அணிக்கு அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முன்னாள் அதிமுக நிா்வாகி டிடிடி தினகரனிடம் சந்திரசேகா் பணம் பெற்ாக தில்லி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்திருந்தனா். அந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை விவகாரத்தை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் லஞ்ச வழக்கில் தினகரன், சந்திரசேகா் ஆகியோருக்கு எதிரான விசாரணைக்கு உயா்நீதிமன்றம் 2019-இல் தடை விதித்திருந்தது. விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் சந்திரசேகருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. அந்த ஆண்டில், மற்றொரு வழக்கில் அவா் சிறையில் இருந்த போது கைது செய்யப்பட்டாா். ஏற்கெனவே, முன்னாள் ஃபோா்டிஸ் ஹெல்த்கோ் மேம்பாட்டாளா் ஷிவிந்தா் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் போன்ற தனிநபா்கள் சிலரை மிரட்டியும், மோசடியும் செய்தது தொடா்புடைய வழக்கில் சுகேஷ் சந்திரசேகா் விசாரணையை எதிா்கொண்டு வருகிறாா். தற்போதைய விவகாரம் ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.