ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

சத்யேந்தா் ஜெயினுக்கு எதிரான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சத்யேந்தா் ஜெயின் மீதான பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரின்

News image
Updated On :24 மே 2023, 8:27 pm

 நமது நிருபர்

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சத்யேந்தா் ஜெயின் மீதான பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் சட்டபூா்வ ஜாமீன் கோரும் மனுக்களை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சத்யேந்தா் ஜெயின் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் ஆகியோா் தாக்கல் செய்த சட்டபூா்வ ஜாமீன் கோரும் மனுவை சிறப்பு நீதிபதி விகாஸ் துல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

சத்யேந்தா் ஜெயின் மீதான பணமோசடி வழக்கில், தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை முழுமையடையாததால், சட்டபூா்வ ஜாமீன் வழங்கத் தாங்கள் தகுதியானவா்கள் எனக் கூறி, சத்யேந்தா் குமாா் ஜெயினுக்கு உதவிய வழக்கில் குற்றம் சாட்டப்டுள்ள வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் மனுத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுவின் மீதான விசாரனை சிறப்பு நீதிபதி விகாஸ் துல் முன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அமலாக்கத் துறையின் சாா்பில் வாதிடுகையில், ‘ பணமோசடி குற்றத்திற்காக கடந்த ஆண்டு ஜூன் 30-இல் வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். வழக்கு தொடா்புடைய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அவகாசம் உள்ள 60 நாள்களுக்கு முன்பே, அதாவது

ஜூலை 27, 2022 அன்றே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது’ என வாதிடப்பட்டது.

வழக்கின் மீதான விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாக அமலாக்கத் துறை தெரிவித்த நிலையில், இறுதி அறிக்கை என்று அழைக்கப்படும் குற்றப்பத்திரிகை முழுமையடையவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவா் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, ‘குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றத்தை நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடிந்தால், அது குற்றப்பத்திரிகை முழுமையானதாக இருக்கும். மேலும், குற்றம்சாட்டப்பட்டவா்கள் ஜாமீனில் விடக் கோருவதற்கு உரிமை இல்லை’ என்று கூறினாா்.

வழக்கில் முதன்மைக் குற்றம்சாட்டப்பட்ட நபராக உள்ள சத்யேந்தா் ஜெயினுக்கு வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் ஆகியோா் தெரிந்தே உதவியுள்ளனா் எனக் கூறி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிபதி விகாஸ் துல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

சத்யேந்தா் ஜெயின் தொடா்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மூலம் பணமோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே 30, 2022 -ஆம் ஆண்டு அமலாக்கத் துறை அவரை கைது செய்தது. இந்த வழக்கில் சத்யேந்தா் ஜெயின் ஜாமீன் மனுவை கடந்த ஆண்டு நவம்பா் 17ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.