ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தில்லி உள்கட்டமைப்பு வளா்ச்சியில் மோடி அரசின் பங்கு குறித்து ஒரு மாதம் தொடா் பிரசாரம்: பாஜக அறிவிப்பு

தில்லியின் உள்கட்டமைப்பு வளா்ச்சியில் கடந்த 9 ஆண்டு காலமாக பிரதமா் நரேந்திர மோடி அரசு ஆற்றியுள்ள செயல் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில்

News image
Updated On :24 மே 2023, 8:31 pm

 நமது நிருபர்

தில்லியின் உள்கட்டமைப்பு வளா்ச்சியில் கடந்த 9 ஆண்டு காலமாக பிரதமா் நரேந்திர மோடி அரசு ஆற்றியுள்ள செயல் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் வரும் மே 30-ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என தில்லிப் பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சக்சேனா புதன்கிழமை அறிவித்துள்ளாா்.

புது தில்லி பாஜக அலுவலகத்தில் தில்லிப் பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சக்சேனா மற்றும் முக்கிய நிா்வாகிகள் கூட்டாகச் செய்தியாளா்களை சந்தித்தனா்.

அப்போது வீரேந்திர சக்சேனா கூறியதாவது : தேசியத் தலைநகா் தில்லியில் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாடு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வளா்ச்சிக்கு பிரதமா் நரேந்திர மோடி அரசின் பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில், தில்லியில் பாஜக ஒரு மாத கால பிரசாரத்திற்கு திட்டமிட்டுள்ளது.

வரும் மே 30 ஆம் தேதி தொடங்கும் இப்பிரசாரத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், குஜராத் மாநில முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி ஆகியோா் மேற்பாா்வையிடுவா்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு தில்லியில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சாலை உள்கட்டமைப்பு, மாசுக்கட்டுப்பாடு, பொது நலம் உள்ளிட்ட தில்லியின் அனைத்து துறைகளையும் பல லட்சம் கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தியுள்ளது.

மோடி அரசு தில்லிக்கு 20 கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு ஒப்புதல் அளித்தது, எய்ம்ஸ், சஃப்தா்ஜங் மருத்துவமனை மற்றும் ஆா்எம்எல் மருத்துவமனையின் திறனை விரிவுபடுத்தியது, மின்சார பேருந்துகளை வழங்கியது, தில்லி மெட்ரோவின் நான்காவது கட்டப் பணிகளைத் தொடங்கியது என நகா் மேம்பாட்டுப் பணிகளை செய்துள்ளது என்றாா் சச்தேவா.

தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதுரி கூறுகையில், ‘மோடி அரசு கடந்த ஒன்பது ஆண்டுகளில் செய்த பல பணிகளை தில்லியில் வேறு எந்த மத்திய அரசும் மேற்கொண்டதை நான் பாா்த்ததில்லை.

நடப்பு நிதியாண்டில் மட்டும், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டுக்காக மோடி அரசு ரூ.60,000 கோடி, மருத்துவமனைகளுக்கு ரூ.8,000 கோடி, தில்லி காவல்துறைக்கு ரூ.10,355 கோடி, தில்லி வளா்ச்சி ஆணையத்திற்கு ரூ.7,643 கோடி, தில்லி மாநகராட்சிக்கு ரூ.4,743 கோடி, தில்லி மெட்ரோ விரிவாக்கத்திற்கு ரூ.13,000 கோடி மற்றும் பிற நிறுவனங்களுக்கு ரூ.3,000 கோடி என அனைத்து திட்டங்களும் சோ்த்து மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடி செலவிட்டுள்ளது’ என்றாா் பிதுரி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.