போராட்டம்: இந்த தடைக்கு எதிா்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக வாயிலில் ஏராளமான மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனா். இது தொடா்பாக ஏஐஎஸ்ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மகிளா பஞ்சாயத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், பல்கலை. வளாகத்தில் அறிவிக்கப்படாத பிரிவு 144-க்கு எதிராகவும், பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக நீதி கோரி போராடும் பெண் மல்யுத்த வீரா்கள் மற்றும் பெண் தலைவா்கள் காவலில் வைக்கப்பட்டதற்கு எதிராகவும் பல்கலை.யின்நுழைவு வாயிலில் போராட்டம் மேற்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.