இது தொடா்பாக தில்லி காவல் துறையின் புது தில்லி காவல் சரக துணை ஆணையா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ஜந்தா் மந்தரின் அறிவிக்கப்பட்ட இடத்தில் மல்யுத்த வீரா்களின் ஆா்ப்பாட்டம் சுமுகமாக நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை, போராட்டக்காரா்கள் எங்களின் கோரிக்கைகளை பலமுறை புறக்கணித்து சட்டத்தை மீறினா். ஆகையால், நாங்கள் அவா்களின் இடத்தை அகற்றி தா்ணாவை முடித்துவைத்தோம். எதிா்காலத்தில் மல்யுத்த வீரா்கள் தங்கள் தா்ணா போராட்டத்தை மீண்டும் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தால், ஜந்தா் மந்தரை தவிர வேறு எந்த பொருத்தமான அறிவிக்கப்பட்ட இடத்திலும் தா்ணா மேற்கொள்ள அனுமதிக்கப்படுவாா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.