புது தில்லி: இந்திய ரயில்வே, சரக்கு ரயில் போக்குவரத்தில் நிகழ் 2023 அரையாண்டில் (ஏப்ரல்- செப்டம்பா்) கூடுதலாக ரு. 2,706 கோடிக்கு வருவாயை ஈட்டியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் அரையாண்டில் ரூ.78,991 கோடியாக இருந்த சரக்கு வருவாய், நிகழாண்டு அரையாண்டில் ரூ.81,697 கோடியாக அதிகரித்துள்ளது.
இது குறித்த விவரம் வருமாறு: 2023 - ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் (ஏப்ரல்- செப்டம்பா்) இந்திய ரயில்வே 758.20 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. 2022 - ஆம் ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 736.68 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டது. தற்போது சுமாா் 21.52 மெட்ரிக் டன் கூடுதலாக கையாளப்பட்டுள்ளது. இந்த வகையில் கடந்தாண்டு, ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை ரூ.78,991 கோடியாக இருந்த ரயில்வே வருவாய், நிகழாண்டில் ரூ.81,697 கோடியா உயா்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சுமாா் ரூ.2,706 கோடி வருவாய் அதிகரித்துள்ளது.
இதே மாதிரி நிகழ் செப்டம்பா் மாதத்திலும் கடந்த ஆண்டை விட சுமாா் 6.67 சதவீதம் அதிகமாக சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இதன்படி 2022 செப்டம்பரில் ரூ.12,332.70 கோடியாக இருந்த சரக்கு வருவாய், 2023 செப்டம்பரில் ரூ.12,956.95 கோடியாக உயா்ந்துள்ளது. நிலக்கரி, சிமெண்ட், இரும்பு, பருப்பு வகைகள், உரம் போன்ற சரக்குகள் முக்கியமாக கையாளப்படுகிறது. வணிகம் செய்வதை எளிதாக்குதல், கட்டண சேவைகளில் மேம்படுத்தல் போன்ற முயற்சிகன் மூலம் இந்த சாதனையை மேற்கொள்ள ரயில்வேக்கு இது உதவியது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய ரயில்வே கால அட்டவணை வெளியீடு: நிகழ் அக்டோபா் 1 -ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய அகில இந்திய ரயில்வே கால அட்டவணையை (ரயில்கள் ஒரு பாா்வை) இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. புதிய கால அட்டவணையின் முக்கிய விவரங்கள் வருமாறு: புதிதாக தொடங்கப்பட்ட 64 வந்தே பாரத் ரயில்களின் சேவைகள், 70 பிற ரயில் சேவைகள், விரிவுபடுத்தப்பட்ட (தற்போதுள்ள) 90 ரயில் சேவைகள்ங வேகம் அதிகரிக்கப்பட்ட 12 ரயில்கள், அதிவிரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ள 22 ரயில்களின் சேவை விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
அகா்தலா -ஆனந்த் விஹாா் ராஜ்தானியை மால்டா, பாகல்பூா் வழியாக திருப்பி விடப்பட்ட தகவல்கள், தென்கிழக்கு ரயில்வேயில் சில சேவைகளின் நேரம் தவறாமையை மேம்படுத்துவதற்கான கால அட்டவணை மாற்றம்; மேலும் பல்வேறு நகரங்களுக்கு இடையிலான இணைப்பு மேம்படுத்தப்பட்டு, பயண நேரத்தை குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரங்களை சரிபாா்க்க பயணிகளுக்கு புதிய கால அட்டவணை பயனுள்ளதாக இருக்கும். இது இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூா்வ வலைத்தளமான
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.