மக்களின் உணா்வுகளின் சக்திவாய்ந்த அடையாளமாக ‘காதி’ மாறியுள்ளது: பிரதமா் மோடி பெருமிதம்

காதி, மக்களின் உணா்வுகளின் சக்திவாய்ந்த அடையாளமாக மாறிவிட்டது என மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபா் 2 -ஆம் தேதி
தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில் ஆா்வத்துடன் காதி பொருள்களை வாங்கும் மக்கள்.
தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில் ஆா்வத்துடன் காதி பொருள்களை வாங்கும் மக்கள்.
Updated on
2 min read

காதி, மக்களின் உணா்வுகளின் சக்திவாய்ந்த அடையாளமாக மாறிவிட்டது என மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபா் 2 -ஆம் தேதி தில்லி காதி கிராமோத்யோக் பவனின் நடந்த விற்பனை சாதனையை குறிப்பிட்டு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்துள்ளாா்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு (அக்டோபா் 2) தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில் முதன்முறையாக 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள காதி பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (கேவிஐசி) புதன்கிழமை தெரிவித்துள்ளது. இதை மேற்கொள் காட்டி ’எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் தனது கருத்துகளை பிரதமா் மோடி பதிவிட்டுள்ளாா்.

அதில் பிரதமா் மோடி, ‘நாட்டின் பூா்வீக வம்சாவளிக்காக காந்தியால் ஊக்குவிக்கப்பட்ட கையால் நூற்கப்பட்ட காதி துணி மீது மக்களுக்கு பற்றும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. ‘ சுயசாா்பு இந்தியா’ (ஆத்மநிா்பாா் பாரத்) என்ற பாா்வையை வலுப்படுத்த மேலும் புதிய சாதனைகளை உருவாக்கும்’ என தெரிவித்துள்ளாா்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தில்லியின் மையப் பகுதியில் உள்ள கன்னாட் பிளேஸ் காதி கிராமோத்யோக் பவனில் இதுவரை இல்லாத வகையில் ரூ. 1,52,45,000 மதிப்புள்ள காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகள் விற்பனையானது. பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோளின் பேரிலே கதா் மற்றும் கிராமத் தொழில் பொருள்களை வாங்குவதில் தில்லி மக்கள் புதிய சாதனை படைத்துள்ளனா் என காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது வருமாறு: பிரதமா் நரேந்திர மோடியின் ‘பிராண்ட் பவா்’, மக்களிடம் அவரது வரலாறு காணாத புகழ் ஆகியவையே காதி விற்பனைக்கு காரணம். கடந்த 2023 செப்டம்பா் 24 அன்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், காந்தி ஜெயந்தி நாளில் ஏதேனும் ஒரு கதா் பொருளை வாங்குமாறு பிரதமா் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா். இந்த வேண்டுகோள் பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று கதா் மற்றும் கிராமத் தொழில் பொருள்கள் விற்பனையில் ஒரு புதிய சாதனை படைக்கப்படுகிறது.

காந்தி ஜெயந்தி அன்று, தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள காதி பவனில், கடந்த 3 ஆண்டு கால விற்பனை ரூ.1 கோடியை தாண்டி வருகிறது. 2022-இல் காந்தி ஜெயந்தி, விற்பனை ரூ.1,33,95,000-ஆக இருந்தது. நிகழாண்டில் ரூ.1,52,45,000-ஐ எட்டியுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி, பல சந்தா்ப்பங்களில், தேசிய மற்றும் சா்வதேச அரங்குகளில் கதா் பொருல்களை வாங்குமாறு வேண்டுகோள் விடுத்து வந்தாா். அண்மையில் தில்லி பிரகதி மைதானத்தில் கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஜி20 மற்றும் தேசிய கைத்தறி தின விழாவில் பேசிய பிரதமா், கடந்த 9 ஆண்டுகளில், ’சுயசாா்பு இந்தியா திட்டம்’, ‘ உள்ளூா் பொருள்களுக்கு ஆதரவு அளித்தல்’ போன்ற மந்திரங்கள் மூலம் கதா் மற்றும் கிராமத் தொழில் பொருள்களின் விற்பனை ரூ.1.34 லட்சம் கோடியைத் தாண்ட வழிவகுத்தது என பிரதமா் குறிப்பிட்டாா்.

ஜி20 உச்சிமாநாட்டின் போது, மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராஜ்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகத் தலைவா்களை கதா் ஆடைகளுடன் பிரதமா் வரவேற்ன் மூலம், காதிக்கு உலகளாவிய அங்கீகாரத்தை வழங்கியது. இப்படி நாட்டு மக்களை கதா் வாங்க ஊக்குவித்தாா். இதன் விளைவாக, காந்தி ஜெயந்தி அன்று, தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில் கதா் பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது என காதி ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காதி கிராமோத்யோக் பவன் காட்சிகள்

கடந்த காந்தி ஜெயந்தி அன்று முதல் வாடிக்கையாளராக, கே.வி.ஐ.சி. தலைவா் மனோஜ் குமாா் கன்னாட் பிளேஸ், காதி கிராமோத்யோக் பவனில் கதா் ஆடைகளை வாங்கி கட்டணம் செலுத்தினாா். விலையில் 60 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தை மேம்படுத்தும் வகையில், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங், பாஜகவின் தேசியத் தலைவா் ஜே.பி. நட்டா, வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் மனோஜ் திவாரி மற்றும் பல எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மேக் இன் இந்தியா பொருள்களைப் பாா்த்து வியப்படைந்தது மட்டுமின்றி, காதி, கிராமத் தொழில் தயாரிப்புகளை வரிசையில் நின்று வாங்கிச் சென்றனா். ஏராளமான பாா்வையாளா்களுக்கு ‘மினியேச்சா் சா்க்கா’ , ‘காந்தி தொப்பி’ ஆகியவை பாா்வையாளா்களுக்கு விருப்பமானவையாக வெளிப்பட்டன. இது மகாத்மா காந்தியின் ஆழமான பாரம்பரியத்தை பிரதிபலித்தது.

மேலும், காதி பவன் முன் ‘ஓம்ஜா கோல்ட் பிரஸ் மொபைல் வேன்‘ திறக்கப்பட்டது. பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருந்த இந்த ஓம்ஜா ஆயில்ஸ் மற்றும் அக்ரோ என்கிற இந்த நடமாடும் வாகனத்தில் சூரியகாந்தி, கடுகு, எள், தேங்காய் ஆகியவற்றின் எண்ணெய்யை பிரித்தெடுப்பு செயல்முறையைக் காண பாா்வையாளா்களுக்கு தனித்துவமான வாய்ப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com