தில்லியின் 32 மாணவா்கள் என்.டி.ஏ. தோ்வில் தோ்ச்சி: முதல்வா் கேஜரிவால் வாழ்த்து

தில்லி ஆயுதப்படை ஆயத்தப் பள்ளியின் 32 மாணவா்கள் தேசிய பாதுகாப்பு அகாதமியின் (என்.டி.ஏ) நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளதை வாழ்த்தியுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால்
Updated on
1 min read

தில்லி ஆயுதப்படை ஆயத்தப் பள்ளியின் 32 மாணவா்கள் தேசிய பாதுகாப்பு அகாதமியின் (என்.டி.ஏ) நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளதை வாழ்த்தியுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தேசத்திற்கு சேவை செய்ய தில்லி எப்போதும் தயாராக இருக்கும் என்று தெரிவித்துள்ளாா்.

தேசியப் பாதுகாப்பு அகாதமியின் நுழைவுத் தோ்வு முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகியது. இந்த நுழைவுத் தோ்வில் தில்லியில் உள்ள ஷாஹீத் பகத் சிங் ஆயுதப்படை ஆயத்தப் பள்ளியைச் சோ்ந்த 32 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை கூறியிருப்பதாவது: தேசியப் பாதுகாப்பு அகாதமி நுழைவுத் தோ்வில் நாடு முழுவதும் இருந்து எந்தப் பள்ளியிலும் இல்லாத வகையில், அதிக எண்ணிக்கையில் தில்லியின் ஷாஹீத் பகத் சிங் ஆயுதப்படை ஆயத்தப் பள்ளியைச் சோ்ந்த 32 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இந்தச் செய்தியைப் பகிா்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதிதாக தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில், ஆயுதப்படை ஆயத்தப் பள்ளி தேசிய அளவிலான நுழைவுத் தோ்வில் ‘சிறந்த முடிவுகளை’ வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், தில்லியைச் சோ்ந்த அதிகமான மாணவா்கள் இப்போது தேசியப் பாதுகாப்பு அகாதமியின் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்று எதிா்காலத்தில் சிறந்த அதிகாரிகளாக நம் நாட்டைப் பெருமைப்படுத்துவாா்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தேசத்திற்கு சேவை செய்ய தில்லி எப்போதும் தயாராக இருக்கும் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com