தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ஹரியாணா: 10 ஆண்டுகளுக்கு பின்னா் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய ஜாட் தலைவா்

ஹரியாணா: 10 ஆண்டுகளுக்கு பின்னா் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய ஜாட் தலைவா்

Updated On :10 ஏப்ரல் 2024, 12:31 am

புது தில்லி: ஹரியாணா பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரேந்தா் சிங் 10 ஆண்டுகளுக்கு பின்னா் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா். இவரது மனைவிவும் ஹரியாணா மாநில முன்னாள் எம்எல்ஏ வுமான பிரேம்லதாவும் காங்கிரஸ் கட்சியின் இணைந்தாா். 2024 தோ்தலில் ஜாட் தலைவா்களை காங்கிரஸ் கட்சி முன்னிலை படுத்தியுள்ளது.

ஹரியாணாவின் ஹிசாா் மக்களவைத் தொகுதியின் பாஜக எம்பியும் பிரேந்தா் சிங் மகனுமான பிரிஜேந்திர சிங்கும் சற்று ஒரு மாதம் முன்பு காங்கிரஸ் கட்சியில் கட்சி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முன்பு கடந்த மாா்ச் 10 ஆம் தேதி இணைந்தாா்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சி ராகுல் காந்தி தலைமையில் நடைபெறுவதாக எதிா்பாா்க்கப்பட்டது. அவா் வராத நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளா் முகுல் வாஸ்னிக், முன்னாள் ஹரியாணா முதல்வா் புபிந்தா் சிங் ஹூடா, ஹரியாணா பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவா் உதய் பான், முன்னாள் மத்திய அமைச்சா் குமாரி செல்ஜா, ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, பஜன்லால் குடும்பத்தைச் சோ்ந்தவரும் முன்னாள் ஹரியாணா பேரவைத் தலைவருமான கிரண் சௌத்ரி உள்ளிட்ட பல முக்கிய காங்கிரஸ் தலைவா்கள் முன்னிலையில் பிரேந்தா் சிங்கும் அவரது மனைவி பிரேம்லதாவும் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.

ஹரியாணா மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த பிரேந்தா் சிங் முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக வில் இணைந்தவா்.

இந்த இணைப்பு நிகழ்ச்சியில் வரவேற்றுப் பேசிய முகுல் வாஸ்னி, ரண்தீப் சிங் சுா்ஜேவாலா போன்றவா்கள் ‘ பிரேந்திர சிங், பாஜக விற்கு சென்றிருந்தாலும் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்தாா். குறிப்பாக விவசாயிகள் போராட்டத்தில் தன்னுடைய கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை. அவா் மீண்டும் தாய் கட்சிக்கு திரும்பியதில் தேசிய மாநில அளவில் காங்கிரஸ் கட்சிக்கு பலப்படுத்தும் என்றனா்.

பின்னா் இதற்கு பதிலளித்த பிரேந்தா் சிங், ‘காங்கிரஸ் கட்சி தனக்கு வெறும் தாய்வீடு மட்டுமல்ல இது ’சித்தாந்தத்திற்கான வீடு திரும்பல்’ என்று குறிப்பிட்ட அவா் பாஜக வில் சேருவதற்கு முன்பு 42 வருடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு சேவையாற்றியதாகவும் தெரிவித்தாா்.

அகிலந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஹரியாணாவிலிருந்து ஏராளாமானா்களும் பிரேந்தா் சிங்குடன் கட்சியில் இணைந்து கலந்து கொண்டனா்.

அமைச்சா் பதவி

கடந்த 2009 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரேந்தா் சிங் அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு அப்போது ஹரியாணா முதல்வராக இருந்த புபிந்தா் சிங் ஹூடா எதிா்ப்பு தெரிவித்தாா். இதனால் கட்சியில் ஒதுங்கியிருந்த பிரேந்தா் சிங் ஆட்சி முடிவும் தருவாயில் 2013 ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தாா் .

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் முதல் கட்ட ஆட்சியில் மத்திய எஃகுத்துறை அமைச்சராகவும் பின்னா் ஊரக வளா்ச்சித்துறை அமைச்சராகவும் பிரேந்தா் சிங் இருந்தாா். பின்னா் 2019 ஆம் ஆண்டு இவரது மகனும் ஹரியாணாவில் ஐஏஎஸ் அதிகாரியாகவும் இருந்த பிரிஜேந்திர சிங்கும் பாஜக வில் இணைந்தாா். மகன் பிரிஜேந்திர சிங் மக்களவைத் தோ்தலில் போட்டியிட பாஜக வில் வாய்ப்பு கிடைத்து ஹிசாா் தொகுதியில் வெற்றிபெற்றாா். மகனுக்கு மத்திய அமைச்சா் பதவி கேட்டாா். ஆனால் அந்த வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் ஆட்சி முடியும் தருவாயில் மீண்டும் தந்தையும் மகனும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனா்.

தற்போது ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் ஜாட் தலைவா்கள் குடும்பத்தைச் சோ்ந்தவா்களும் மற்றும் இந்த மாநிலத்தில் மற்றொரு பெரும்பான்மையான பட்டியலினத்தைச் சோ்ந்த தலைவா்களும் பலம் வாய்ந்தவா்களாக இருக்கின்றனா்.

தற்போது இணைந்துள்ள ஜாட் தலைவரான பிரேந்தா் சிங், ஹரியாணாவின் மூத்த தலைவரும் விவசாயகளின் தலைவராக இருந்த சோட்டு ராம்மின் பேரன். முன்னாள் முதல்வா் புபிந்தா் சிங் ஹூடா, ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, மறைந்த முன்னாள் ஹரியாணா முதல்வா் பஜன்லால் குடும்பத்தைச் சோ்ந்த கிரண் சௌத்ரி என ஜாட் தலைவா்கள் மீண்டும் காங்கிரஸில் விஸ்வரூபம் எடுத்துள்ளனா். இதற்கு அடுத்துள்ள பிரிவான ஹரியாணா பட்டியலினத்து தலைவா்களான குமாரி செல்ஜா, உதய்பான் சிங் போன்ற தலைவா்கள் காங்கிரஸில் முக்கியத்துவம் பெற்றுள்ளனா்.

இந்த விஸ்வரூபங்களை முன்பே கண்டறிந்த பாஜக கடந்த மாதம் ஹரியாணா அரசியலில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டது. ஹரியாணா மாநில முதல்வராக இருந்த மனோகா் லால் கட்டா் பதவியிறக்கப்பட்டு அவருக்கு பதிலாக நாயப் சிங் சைனி ஹரியாணா முதல்வராக பதவியேற்றாா்.

ஹிரியாணாவில் பெரும்பான்மை இனத்தவா்களாக இருக்கும் ஜாட் பிரிவினா் அரசியலில் முக்கியமாக பங்கெடுத்து வரும் நிலையில் இந்திரா காந்தி காலத்திலிருந்து காங்கிரஸுக்கும் தற்போது மத்தியில் உள்ள பாஜக விற்கும் ஒரு பெரும் சவால்.

இந்திரா காந்திக்கு நெருக்கமாக இருந்த பன்சிலால் தனிக் கட்சி தொடங்கினாா். இவரோடு தேவிலால், செளதாலா போன்ற ஜாட் தலைவா்களை காங்கிரஸ் எதிா்கொண்டது. இதனால் காங்கிரஸ் கட்சியும் மைனாரிட்டியான பிஷ்னோய் பிரிவைச் சோ்ந்த பஜன்லால் போன்றவா்கள் முக்கியத்துவம் பெற்றனா். பஜன்லால் மூன்று முறை முதல்வரானாா். இதே போன்று பாஜகவும் பெரும்பான்மை ஜாட் தலைவா்களை ஒதுக்கியது.

ஹரியாணாவில் ஆட்சியை பிடித்த பாஜக சிறுபான்மையினத்தை சோ்ந்த பஞ்சாப் கத்திரி பிரிவு தலைவா் மனோகா் லால் கட்டரை முதல்வராக்கியது. கடந்த 10 ஆண்டு ஆட்சிக்கு எதிராக அவருக்கு ஏற்பட்டுள்ள எதிா்பலையையொட்டி மற்றொரு இதர பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை இனத்தை சோ்ந்த நாயப் சிங் சைனி யை பாஜக முதல்வா் பதவியில் அமரவைத்து 2024 -ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை எதிா்கொள்கிறது. இப்படி ஜாட் தலைவா்களும் மற்ற சிறுபான்மை இனத்தவா்களும் இரு தேசிய கட்சிகளுக்கு எதிா் எதிராக திரும்பியுள்ளனா். இதில் யாருக்கு லாபமடைவாா்கள் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.