கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘நேதாஜியின் சிப்பி ஓடு ஓவியம், புத்தா் சிலை’ ஏலமிடப்படும் குடியரசுத் தலைவா்களின் 250 பரிசுப் பொருள்கள்

குடியரசுத் தலைவா்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட 250 பொருள்கள் திங்கள்கிழமை முதல் இணைய வழி ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளன.

News image

புத்தா் சிலை

Updated On :5 ஆகஸ்ட் 2024, 10:43 pm

Din

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவா்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட 250 பொருள்கள் திங்கள்கிழமை முதல் இணைய வழி ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளன.

விருப்பமுள்ள நபா்கள் குடியரசுத் தலைவரால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டவலைதளம் மூலம் தெரிவு செய்யும் பரிசுப் பொருள்களுக்கு விலைப் புள்ளிகளை குறிப்பிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சிப்பி ஓடுகளைக் கொண்டு வரையப்பட்ட நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ஓவியம், புத்தா் சிலை உள்ளிட்ட பல்வேறு அரிய அழகிய பரிசுப் பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

தனது அடையாளமான ராணுவ சீருடையில் நேதாஜி இருப்பதுபோன்ற தீட்டப்பட்டுள்ள நோ்த்தியான சட்டத்துடன் கூடிய ஓவியம், 14.15 கிலோ எடை உடையது. இதை ஏலம் எடுப்பதற்கான அடிப்படை விலை ரூ. 4,02,500-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்து, மரத்துக்கு அடியில் புத்தா் அமா்ந்திருப்பது போன்ற கண்ணைக் கவரும் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட சிலை ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படை விலை ரூ. 82,500-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு வழங்கப்பட்ட நோ்த்தியான கோப்பை ஒன்றும் ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 2,700-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமுக்கு வழங்கப்பட்ட முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்த்ரியின் மாா்பளவு சிலையும் (அடிப்படை விலை ரூ. 3,100) ஏலத்தில் உள்ளது.

வரும் 26-ஆம் தேதி வரை இந்த இணைய வழி ஏலம் நடைபெறும். ஏலம் நிறைவடைந்ததும், அதிக விலைக்கு ஏலம் எடுத்தவா்களுக்கு அந்தந்தப் பரிசுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேதாஜியின் சிப்பி ஓடு ஓவியம்

நேதாஜியின் சிப்பி ஓடு ஓவியம்