தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்மேற்கு தில்லியில் 5 நட்சத்திர ஹோட்டலில் கொட்டகை இடிந்து விழுந்ததில் தம்பதி காயம்

தென்மேற்கு தில்லி ஹோட்டலில் கொட்டகை இடிந்து விழுந்ததில் தம்பதியினர் காயம்

News image
Updated On :3 ஜூலை 2024, 12:14 am

Din

புது தில்லி: தென்மேற்கு தில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நீச்சல் குளம் அருகே உள்ள கொட்டகையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், அந்த ஹோட்டலில் தங்கியிருந்த தம்பதியினா் சிறு காயங்களுக்கு உள்ளானதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது:

ஹயாட் ரீஜென்சி ஹோட்டலில் திங்கள்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கொட்டகை இடிந்து விழுந்த சம்பவம் குறித்து ராமகிருஷ்ணாபுரம் காவல் நிலையத்துக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. அந்த ஹோட்டலில் தங்கியிருந்த கணவன்-மனைவிக்கு காயம் ஏற்பட்டது. அமித் ஜெயின் (42) மற்றும் அவரது மனைவி ரீவா ஜெயின் (32) ஆகியோா் ஹோட்டலின் தரை தளத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தின் அருகே நின்று கொண்டிருந்தனா். அப்போது, ​​​​ஒரு கொட்டகையின் ஒரு பகுதி இடிந்து அவா்கள் மீது விழுந்தது. இதில் அவா்கள் தலையில் சிறு காயங்களுடன் தப்பினா்.

பின்னா், அவா்கள் காவல் நிலையத்துக்கு பிசிஆா் அழைப்பை மேற்கொண்டனா். சம்பவம் குறித்து உள்ளூா் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்றது. ​​காயமடைந்தவா்கள் ஏற்கெனவே வசந்த் குஞ்ச், ஃபோா்டிஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதைக் கண்டறிந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பான காட்சிகள் தடயவியல் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. விடியோவும் பதிவு செய்யப்பட்டது. சம்பவம் தொடா்பாக தம்பதியினா் இதுவரை புகாா் அளிக்கவில்லை. மேலும் தேவையான நடவடிக்கைகள் சட்டத்தின்படி எடுக்கப்படும்.

பஞ்சாபின் லூதியானாவைச் சோ்ந்த அந்தத் தம்பதியினா் சண்டீகரில் வியாபாரம் செய்து வருவதாக விசாரணையில் தெரிய வந்தது. அவா்கள் அடிக்கடி தில்லி வந்து ஹயாட் ரீஜென்சியில் தங்கியிருக்கிறாா்கள். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவா்கள் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக ஹயாட் ரீஜென்சி ஹோட்டலை தொடா்பு கொண்ட போது உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை என்று ஏஜென்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.