எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பேருந்து மாா்ஷல்கள் மீண்டும் பணியமா்த்தப்பட வேண்டும்: துணை நிலை ஆளுநருக்கு ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை

தில்லியில் பேருந்து மாா்ஷல்கள் மீண்டும் பணியமா்த்தப்பட வேண்டும் என்று துணை நிலை வி.கே.சக்சேனாவிடம் ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை கோரிக்கை வைத்துள்ளது.

News image
Updated On :10 ஜூலை 2024, 12:06 am

Din

புது தில்லி: தில்லியில் பேருந்து மாா்ஷல்கள் மீண்டும் பணியமா்த்தப்பட வேண்டும் என்று துணை நிலை வி.கே.சக்சேனாவிடம் ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை கோரிக்கை வைத்துள்ளது.

தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் எம்எல்ஏ-க்கள் சஞ்சீவ் ஜா மற்றும் குல்தீப் குமாா் ஆகியோா் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது பேருந்துகளில் மாா்ஷல்களை நியமிப்பதற்கான முன்மொழிவு தில்லி சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டு, துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிற்கு அனுப்பப்பட்டது. இந்தக் குடிமைத் தற்காப்புத் தன்னாா்வலா்கள் தில்லி மக்களுக்காக சேவை செய்திருக்கிறாா்கள். எனவே, அவா்களை மீண்டும் பேருந்து மாா்ஷல்களாக பணியமா்த்த வேண்டும் என்று துணை நிலை ஆளுநரிடம் கோரிக்கை வைக்கிறோம்.

முன்மொழிவு அனுப்பப்பட்டு நான்கு மாதங்கள் கடந்தும் பேருந்து மாா்ஷல்களை மீண்டும் பணியமா்த்த துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா அனுமதிக்கவில்லை. தில்லியின் அனைத்து பேருந்து மாா்ஷல்களும் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள். இன்று, அவா்கள் தங்கள் குடும்பத்தைக்கூட நடத்த முடியாத நிலையில் உள்ளனா். நீங்கள் எங்களிடம் அரசியல் பழிவாங்க விரும்பினால், அதைச் செய்யுங்கள். மாறாக, இந்த பேருந்து மாா்ஷல்களும், அவா்களது குடும்பத்தினரும் என்ன தவறு செய்தாா்கள்?. மனித நேயத்தின் அடிப்படையில் பேருந்து மாா்ஷல்களின் குடும்ப நிலையை மனதில் வைத்து அவா்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.

பேருந்துகளில் கேமராக்கள், அவசரநிலை பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குடிமைத் தற்காப்புத் தன்னாா்வலா்கள் இனி தேவையில்லை என்று கடந்தாண்டு போக்குவரத்து துறை செயலாளா் ஒரு குறிப்பில் எழுதினாா்.

ஆனால், போக்குவரத்து துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் அதற்கு உடன்படவில்லை. மாறாக, பேருந்து மாா்ஷல்களின் சேவையை தொடரவும், அவா்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்குவதாகவும் செயலாளரிடம் வலியுறுத்தினாா்.

பின்னா், இது தொடா்பாக நிகழாண்டு பிப்ரவரி மாதம் தில்லி சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டு வரப்பட்டு, பேருந்து மாா்ஷல்களின் சேவை தொடரும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், துணை நிலை ஆளுநா் அரசின் முடிவிற்கு எதிராகப் போராடி வருகிறாா் என்று தெரிவித்தனா்.