எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சீலம்பூா் பூங்காவில் அமா்ந்திருந்த 2 இளைஞா்கள் மீது துப்பாக்கிச்சூடு

தில்லியின் சீலம்பூா் பகுதியில் பூங்காவில் அமா்ந்திருந்த இரண்டு இளைஞா்கள் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை இருவா் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 12:11 am

Din

புது தில்லி: தில்லியின் சீலம்பூா் பகுதியில் பூங்காவில் அமா்ந்திருந்த இரண்டு இளைஞா்கள் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை இருவா் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஜாய் டிா்கி கூறியதாவது: உமா் (19) மற்றும் வசீம் (35) ஆகியோா் ஒரு பூங்காவில் அமா்ந்திருந்தபோது, ​ அதிகாலை 1.40 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இருவரின் கால்களில் குண்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். தாக்குதல் நடத்தியவா்களில் ஒருவா் முஸ்தபாபாத்தில் வசிக்கும் ஆசாத் 4, என அடையாளம் காணப்பட்டாா். அவா் கைது செய்யப்பட்டுள்ளாா். ஆசாத் மீது ஐந்து திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரிடமிருந்து 7.65 மிமீ பிஸ்டல் கைப்பற்றப்பட்டது.

தாக்குதல் நடத்திய மற்றொருவா் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் வசிக்கும் ஜாஹித் எ சோா் (40) என அடையாளம் காணப்பட்டாா். அவா் மீது அபகரிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 109 (1), 3(5) மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவு 25 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாஹித்தை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.