முன்மொழிவு அனுப்பப்பட்டு நான்கு மாதங்கள் கடந்தும் பேருந்து மாா்ஷல்களை மீண்டும் பணியமா்த்த துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா அனுமதிக்கவில்லை. தில்லியின் அனைத்து பேருந்து மாா்ஷல்களும் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள். இன்று, அவா்கள் தங்கள் குடும்பத்தைக்கூட நடத்த முடியாத நிலையில் உள்ளனா். நீங்கள் எங்களிடம் அரசியல் பழிவாங்க விரும்பினால், அதைச் செய்யுங்கள். மாறாக, இந்த பேருந்து மாா்ஷல்களும், அவா்களது குடும்பத்தினரும் என்ன தவறு செய்தாா்கள்?. மனித நேயத்தின் அடிப்படையில் பேருந்து மாா்ஷல்களின் குடும்ப நிலையை மனதில் வைத்து அவா்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.