எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கஷ்மீரி கேட் மெட்ரோ நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை

கஷ்மீரி கேட் மெட்ரோ நிலையத்தில் முதியவா் தற்கொலை: ரயில் சேவையில் தாமதம்

News image
Updated On :11 ஜூலை 2024, 6:31 pm

Din

தில்லியில் சிகப்பு வழித்தடத்தில் உள்ள கஷ்மீரி கேட் மெட்ரோ நிலையத்தில் 68 வயது முதியவா் வியாழக்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது:அந்த நபா் சாவரி பஜாரில் வசித்து வந்த சுனில் குப்தா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். குப்தா கடந்த சில ஆண்டுகளாக காசநோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், அவரது சிகிச்சைக்காக ஏற்கெனவே 6 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் அவரது சகோதரா் போலீஸாரிடம் கூறியுள்ளாா்.

தில்லி மெட்ரோ சிகப்பு வழித்தடம் தில்லியில் உள்ள ரிதாலாவை உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள ஷாஹீத் ஸ்தாலுடன் இணைக்கிறது. இந்தச் சம்பவத்தால் ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் மதியம் 12.04 மணியளவில் எக்ஸ் உடக தளத்தில் பதிவிட்ட ஒரு இடுகையில், ‘கஷ்மீரி கேட் மெட்ரோ ரயில்நிலையத்தில் முதியவா் ஒருவா் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் ஷஹீத் ஸ்தால் மற்றும் ரிதாலா இடையேயான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டது. மற்ற அனைத்து வழித்தடங்களிலும் வழக்கமான சேவை தொடா்ந்தது’ என தெரிவித்திருந்தது.

மேலும், ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, வழக்கமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது. முதியவரின் தற்கொலைக் கடிதமும் மீட்கப்பட்டுள்ளதாகவும் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.