இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி "எஸ்கேஎம்' மீண்டும் போராட முடிவு

பெருநிறுவனங்கள் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

News image
Updated On :11 ஜூலை 2024, 6:31 pm

Din

நமது சிறப்பு நிருபர்

புது தில்லி ஜூலை, 11: விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதத்திற்கான சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான "சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்)' மீண்டும் போராட்டத்தை தொடங்கப் போவதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இந்த முறை தில்லியை நோக்கி பேரணியாக வருவதை விட சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் ஹரியாணா, மகராஷ்டிரம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாகவும் எஸ்கேஎம் தெரிவித்துள்ளது.

அதற்கு முன்பு, பிரதமர் மோடியையும் எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை முறையே ஜூலை 16, 17, 18 ஆகிய தேதிகளில் சந்தித்து கோரிக்கைளை வலியுறுத்தி மனுக்களை அளித்து முறையிட இருப்பதாகவும் எஸ்கேஎம் தலைவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து எஸ்கேஎம் கூட்டமைப்பில் உள்ள விவசாயத் தலைவர்கள் ஹன்னான் முல்லா, யுத்வீர் சிங், டாக்டர் சுனிலம், பி கிருஷ்ணபிரசாத், ஆர் வெங்கையா ஆகியோர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தில்லியில் புதன்கிழமை (ஜூலை 10 } ஆம் தேதி) எஸ்கேஎம் அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. பாஜகவின் வகுப்புவாத மற்றும் பெரு நிறுவன சார்பு கொள்கைகளை முறியடிக்கும் வகையில் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளும் தொழிலாளர்களும் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக பாஜக 63 இடங்களை இழந்து 240 இடங்களை மட்டுமே பெற்றது.

அனைத்து வேளாண் பயிர்களுக்கும் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வமாக உத்தரவாதம், விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்க வேளாண் கடன் ரத்து, மின்துறையில் தனியார் தலையீடு, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் போன்ற விவகாரங்களில் கடந்த 2021 டிசம்பர் 9 }ஆம் தேதி மத்திய அரசின் வேளாண்மைத் துறை செயலாருக்கும் எஸ்கேஎம்மிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டில் மத்திய அரசு கையொப்பமிட்ட பின்னரே அப்போது விவசாயிகள் போராட்டத்தை ஒத்திவைத்தனர். இதில் 15 கோரிக்கைகளை அமல்படுத்த மத்திய அரசிடம் முறையிட்டுள்ளோம். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரையும் மற்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து பேசுவோம்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை மீண்டும் தொடங்க பொதுக்குழு முடிவு செய்தது.

பெருநிறுவனங்கள் இந்தியாவிலிருந்து வெளியேற வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் 9}ஆம் தேதி "பெருநிறுவனங்கள் வெளியேறும் நாளாக' அனுசரிக்கப்படும். அன்றைய தினம் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.