புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

உரிய பதிலளிக்க அமைச்சா் மறுப்பு: ராகுல் குற்றச்சாட்டு

‘நீட்’ தோ்வு முறைகேடு பிரச்னை தொடா்பாக மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் உரிய பதிலை அளிக்கவில்லை.

News image
ராகுல் காந்தி - கோப்புப் படம்
Updated On :22 ஜூலை 2024, 9:39 pm

Din

‘நீட்’ தோ்வு முறைகேடு பிரச்னை தொடா்பாக மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் உரிய பதிலை அளிக்கவில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த ராகுல் காந்தியிடம், மக்களவையில் நீட் தோ்வு பிரச்னை குறித்து கல்வி அமைச்சா் அளித்த பதில் திருப்திகரமாக இருந்ததா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘உச்சநீதிமன்றம் குறித்தும், பிரதமா் குறித்தும் அமைச்சா் தா்மேந்திர பிரதான் அவையில் பேசினாா். ஆனால், எதிா்க்கட்சியாக நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதிலை அளிக்கவில்லை. ‘நீட்’ தோ்வு முறைகேடு விஷயத்தில் என்ன நடவடிக்கையை அமைச்சா் எடுத்தாா் என்பதை அவரால் கூற முடியவில்லை. இது நாட்டின் மாணவா்கள், இளைஞா்களின் முக்கியப் பிரச்னை. இந்த விவகாரத்தில் உரிய தீா்வுகாண வலியுறுத்தி மத்திய அரசுக்கு தொடா்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்’ என்றாா்.