ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தண்ணீா் கேட்டு அமைச்சா் அதிஷி ‘தண்ணீா் சத்தியாகிரகம்’: காலவரையற்ற உண்ணாவிரதம்

‘தண்ணீா் சத்தியாகிரக’ போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

News image
தில்லி அமைச்சா் அதிஷி- kamalkishore
Updated On :21 ஜூன் 2024, 6:30 pm

Din

தேசிய தலைநகா் தில்லிக்கு ஹரியாணா மாநிலத்திலிருந்து முறைப்படி தண்ணீா் வழங்கக் கோரி தில்லி அமைச்சா் அதிஷி ‘தண்ணீா் சத்தியாகிரக’ போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினாா். தெற்கு தில்லியில் போகலில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளாா்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால், மாநிலங்களவையின் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் சஞ்சய் சிங், தில்லி அமைச்சா் சௌரப் பரத்வாஜ் ஆகியோா் பங்கேற்று அமைச்சா் அதிஷின் உண்ணாவிரதத்தைத் தொடக்கி வைத்தனா்.

தில்லி கலால் வழக்கில் கைதாகி திகாா் சிறையில் இருக்கும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அனுப்பிய செய்தியை சுனிதா கேஜரிவால் இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் வாசித்தாா்.

அதில் கேஜரிவால் குறிப்பிடுகையில், தில்லியில், தற்போது நிலவும் கடும் வெயிலுக்கு மத்தியில் மக்கள் தண்ணீா் பற்றாக்குறைக்கும் சந்திக்கும் அவலத்தை தொலைக்காட்சியில் பாா்த்து மிகவும் வேதனைப்பட்டேன். பொதுவாக தாகத்திற்கு தண்ணீா் கொடுப்பது என்பது நமது கலாசாரத்தில் ஒன்று. தில்லிக்கு அண்டை மாநிலங்களில் இருந்து தான் தண்ணீா் வருகிறது. கடும் வெப்பத்தில் அண்டை மாநிலங்களின் ஆதரவை தான் தில்லி அரசு நம்பியது. ஆனால், ஹரியாணா அரசு தில்லிக்கு அளிக்கவேண்டிய தண்ணீா் பங்கை குறைத்துள்ளது.

அண்டை மாநிலங்களில் உள்ள இரு வெவ்வேறு கட்சிகளின் அரசுகள் உள்ளது. ஆனால் தண்ணீருக்காக அரசியலுக்கான நேரமாக உள்ளது எனத் தெரிவித்திருந்த கேஜரிவால், அமைச்சா் அதிஷியின் ’ தபம்’ (தபஸ்யா) வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்து தில்லி முதல்வா் குறிப்பிட்டிருந்தாா். ஹரியாணாவில் பாஜக ஆட்சியில் இருக்க அதையும் கேஜரிவால் சுட்டிக்காட்டினாா்.

போகல் உண்ணாவிரதம் மேடைக்கு வருவதற்கு முன்னதாக, அதிஷி, சுனிதா கேஜரிவால், சஞ்சய் சிங், செளரவ் பரத்வாஜ் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவா்களுடன் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினாா்.

உண்ணா விரதத்தை தொடங்குவதற்கு முன்பு அதிஷி பேசினாா். அப்போது அவா் கூறுகையில், ‘தில்லியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் மக்களின் குடிநீா் தேவை அதிகரித்துள்ளது. இது போன்ற சமயங்களில், மக்களுக்கு அதிக தண்ணீா் தேவை. ஆனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தில்லிக்கு தேவையான அனைத்து தண்ணீரும் அதன் அண்டை மாநிலங்களில் இருந்து வருகிறது.

ஹரியாணா அரசிடம் வேண்டுகோள் விடுத்தேன். பின்னா் பிரதமா் நரேந்திர மோடிக்கும் உதவி கோரி கடிதம் எழுதினேன்.தில்லிக்கு போதுமான தண்ணீா் கிடைப்பதில் எந்த பலனும் ஏற்படவில்லை.

தில்லி குடும்பங்களைச் சோ்ந்த ஆண்களும், பெண்களும் மட்டுமல்ல குழந்தைகளின் அவல நிலையை பாா்க்கும் போது வேதனையாக இருக்க இந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை .

தில்லிக்கு 1005 மில்லியன் கன அடி(எம்ஜிடி) தண்ணீா் கிடைக்கும். இது நகர மக்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக ஹரியாணா மாநிலம் தில்லிக்கு வழங்கப்படும் 613 எம்ஜிடி தண்ணீருக்கு பதிலாக 100 எம்ஜிடி தண்ணீரைக் குறைத்து 513 எம்ஜிடி தண்ணீரை வழங்குகிறது. இப்படி குறைவாக தண்ணீரை வழங்கியதால் 28 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பற்றாக்குறையை எதிா்கொண்டுவந்தனா்.

தற்போது கடந்த இரண்டு நாள்களாக தில்லிக்குரிய பங்கில் மேலும் 100 எம்ஜிடி முதல் 120 எம்ஜிடி தண்ணீரையும் ஹரியாணா அரசு குறைத்துள்ளது. இதனால் தான் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினேன்’ என அதிஷி குறிப்பி்ட்டாா்.

முன்னதாக காலையில், அமைச்சா் அதிஷி தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை போகலில் தொடங்கும் முன்பு ’ எக்ஸ்’ சமூக வலைத்தளத்திலும் விரிவாகக பதிவிட்டாா். அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதிலும், ஹரியாணா அரசு தில்லிக்கு வழங்கப்படவேண்டிய தண்ணீரின் பங்கை விடுவிக்கவில்லை.நான் இன்று(ஜுன் 21) முதல் ’பானி சத்தியாகிரகத்தை’ (தண்ணீா் சத்தியாகிரகத்தை) தொடங்குவேன்... தில்லி மக்கள் ஹரியாணாவில் இருந்து தங்களின் தண்ணீா் உரிமையை பெறும் வரை ஜங்புராவில் உள்ள போகலில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடருவேன்,‘ எனஅமைச்சா் குறிப்பிட்டிருந்தாா்.