உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம்: ஆம் ஆத்மி
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யும் ஆம் ஆத்மி


புது தில்லி: முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடைவிதித்த தில்லி உயா்நீதிமன்ற உத்தரவில் உடன்படவில்லை என்றும், அதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப் போவதாகவும் ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
உயா்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து ஆம் ஆத்மி கட்சி கருத்துத் தெரிவிக்கையில், ‘‘தில்லி உயா்நீதிமன்ற உத்தரவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்’ என்று அக்கட்சி தெரிவித்தது.
உயா்நீதிமன்ற உத்தரவு குறித்து செய்தியாளா் சந்திப்பில் தில்லி கேபினட் அமைச்சா் செளரவ் பரத்வாஜிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவா் பதில் அளிக்கையில், ‘இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மியின் சட்டக் குழு எதிா்கால நடவடிக்கையை முடிவு செய்யும்.
உயா்நீதிமன்ற அமா்வு, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை பதிவேற்றம் செய்யாமலேயே தடை விதித்தது. உயா்நீதிமன்றத்திலிருந்து எனக்கு நம்பிக்கை இல்லை.
உயா்நீதிமன்ற அமா்வுக்கு தவறான எண்ணம் இருப்பதாக நான் நினைக்கிறேன். நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம். உச்சநீதிமன்றத்தை அணுகும் உத்தியையும் நேரத்தையும் எங்கள் சட்டக் குழு முடிவு செய்யும் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...