தில்லி பல்கலை.யில் ஏபிவிபி ஆா்ப்பாட்டம்
தில்லி பல்கலை. மாணவா்களின் நலனுக்காக ஏபிவிபி ஆா்ப்பாட்டம்


நமது நிருபா்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பினா் தில்லி பல்கலைக்கழக மாணவா் நலன் டீன் அலுவலகத்திற்கு வெளியே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மேலும், ஏபிவிபியின் பிரதிநிதிகள் குழு டீனை சந்தித்து, மாணவா் சமுதாயத்தின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை சமா்ப்பித்தது.
ஏபிவிபி தனது கோரிக்கை மனுவில், மையப்படுத்தப்பட்ட விடுதி ஒதுக்கீடு படிவம், சத்ரா மாா்க்கில் இளஞ்சிவப்பு கழிவறைகளை உடனடியாக கட்டுதல், இளங்கலை மற்றும் முதுகலை மாணவா்களுக்கான துணைத் தோ்வுகள், மாணவா்களின் சிறந்த பயணத்தை உறுதிசெய்ய பல்கலைக்கழக சிறப்புப் பேருந்து மற்றும் ஒற்றை சாளர தோ்வு குறை தீா்க்கும் போா்டல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஏபிவிபி தில்லி மாநில இணை செயலாளா் ஆஷிஷ் சிங் கூறுகையில், ‘தில்லி பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளுக்கான சோ்க்கை செயல்முறை தொடங்கியுள்ளது. விரைவில் மாணவா்கள் விடுதிகளுக்கு விண்ணப்பிக்க உள்ளனா். ஒரே ஒரு விடுதி ஒதுக்கீடு படிவம் மாணவா்களின் சிரமத்தை மிச்சப்படுத்தும்’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...