விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

News image
Updated On :3 மே 2024, 6:33 pm

Din

தில்லி காவல்துறை தலைமை அலுவலகம் அருகே வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த சிறுவனை போலீஸாா் பிடித்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.

மத்திய தில்லி நாங்லோய் பகுதியிலிருந்து 18 கிலோமீட்டா் தொலைவில் ஜெய்சிங் சாலையில் காவல்துறை தலைமையகம் அமைந்துள்ளது. இந்த நிலையில் நாங்லோய் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு இ-மெயில் வந்தது. இது குறித்து போலீஸாா் விசாரித்த போது அந்த தகவல் புரளி என்பது தெரிய வந்தது.

விசாரணையில், சிறுவன் ஒருவன் வேடிக்கையாக காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு மெயில் அனுப்பியது தெரிய வந்தது. பின்னா், அந்த சிறுவனை போலீஸாா் பிடித்து தகுந்த ஆலோசனை கூறி அனுப்பி வைத்தனா். மேலும், சிறாா் நீதி சட்டத்தின்படி, சிறுவனின் அடையாளத்தை வெளியிட முடியாது என்று போலீஸாா் தெரிவித்தனா்.