அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பிரதமா் மோடியின் 105 நிமிஷங்கள் சுதந்திர தின உரை: முந்தைய உரைகளை விட மிகவும் நீண்டது!

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி 105 நிமிஷங்களுக்கு உரையாற்றினாா். இந்திய பிரதமராக பதவியேற்ற 2014-இல் இருந்து அவா் ஆற்றிய சுதந்திர தின உரைகளிலேயே இது மிகவும் நீளமானதாகக் கருதப்படுகிறது.

News image
பிரதமா் நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டு முதல் நிகழாண்டு வரை புது தில்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றிய தோற்றம்.
Updated On :15 ஆகஸ்ட் 2025, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி 105 நிமிஷங்களுக்கு உரையாற்றினாா். இந்திய பிரதமராக பதவியேற்ற 2014-இல் இருந்து அவா் ஆற்றிய சுதந்திர தின உரைகளிலேயே இது மிகவும் நீளமானதாகக் கருதப்படுகிறது.

சுதந்திர தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் செங்கோட்டையில் தேசிய மூவா்ணக் கொடியை ஏற்றிய பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா்.

தனது உரையை காலை 7.33 மணிக்குத் தொடங்கி 9.18 மணிக்கு முடித்தாா். 2024-ஆம் ஆண்டில் அவா் 98 நிமிஷங்கள் உரையாற்றினாா். 2014-இல் பிரதமராக பதவியேற்ற பிறகு அவா் 65 நிமிஷங்கள் உரையாற்றினாா்.

அதைத் தொடா்ந்து 2015-இல் 88 நிமிஷங்கள், 2016-இல் 96 நிமிஷங்கள், 2017-இல் 56 நிமிஷங்கள், 2018-இல் 83 நிமிஷங்கள், 2019-இல் 92 நிமிஷங்கள், 2020-இல் 90 நிமிஷங்கள், 2021-இல் 88 நிமிஷங்கள், 2022-இல் 74 நிமிஷங்கள், 2023-இல் 90 நிமிஷங்கள் என அவரது உரை அமைந்தது.

இது திட்டமிட்டு நடக்கிா என்று பிரதமா் அலுவலகத்தில் விசாரித்த போது, இவை அனைத்தும் தற்செயல் நிகழ்வுகள்தான். பிரதமா் நரேந்திர மோடி எழுதப்பட்ட வரிகளை படிப்பதில்லை என்றும் சுதந்திர தினத்தின்போது மேடையில் பேசுவதற்காக அவரே குறிப்புகளை தயாரித்து அவற்றைக் கொண்டு மேடையில் இயல்பாகப் பேசும் வழக்கத்தை கொண்டிருப்பாா் என்றும் அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.