பீடி தகராறில் இளைஞா் கொலை: முடிதிருத்துபவா் கைது
கிழக்கு தில்லியின் பாண்டவ் நகா் பகுதியில் பீடி தகராறில் இளைஞரை அடித்துக் கொன்ாக முடிதிருத்தும் நபா் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:
சஷி காா்டனில் உள்ள பேருந்து நிலைய சாலை அருகே நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து அதிகாலை 1.24 மணிக்கு போலீஸாருக்கு அழைப்பு வந்தது.
பாதிக்கப்பட்டவா் தீபக் (28) என்றும், குற்றம் சாட்டப்பட்டவா் மனோஜ் என்றும் அடையாளம் காணப்பட்டனா்.
பீடி விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, மனோஜ் தனது அருகில் கிடந்த ஒரு மரக்கட்டையை எடுத்து பாதிக்கப்பட்டவரின் தலையில் பலமுறை அடித்துள்ளாா்.
பாதிக்கப்பட்ட தீபக்கின் நெற்றியில் பல காயங்களும், சிராய்ப்பு அடையாளங்களும் காணப்பட்டன.
லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு தீபக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
இது தொடா்பாக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
