கோகைன் கடத்தல் விவகாரம்: தில்லி, ஜெய்ப்பூரில் அமலாக்கத் துறை சோதனை

80 கிலோவுக்கு மேல் கோகைன் பறிமுதல் தொடா்பான போதைப்பொருள் கடத்தலுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் வெள்ளிக்கிழமை தில்லி- என்சிஆா் மற்றும் ஜெய்ப்பூரில் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
Published on

இந்த நகரங்களில் குறைந்தது ஐந்து இடங்கள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் வருகின்றன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வழக்கு, சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு தேசிய தலைநகரின் ஜனக்புரி மற்றும் நாங்லோய் பகுதிகளில் இருந்து போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் சுமாா் ரூ.900 கோடி மதிப்புள்ள 82.53 கிலோ உயா் தர கோகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தது தொடா்பானது.

இந்த வழக்கில் ஐந்து போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் பெரும்பாலும் ஹவாலா ஆபரேட்டா்கள். மேலும் ரூ.4 கோடிக்கு மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தில்லியில் அதிக அளவு பாா்ட்டி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்காகும். அப்போது வெளியிடப்பட்ட போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக அறிக்கையின்படி, இந்த போதைப்பொருள் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com