கொள்ளை வழக்கில் பரோலில் வெளியே வந்து 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

2011- ஆம் ஆண்டு கொள்ளை வழக்கில் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்து 6 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
Published on

நமது நிருபா்

2011- ஆம் ஆண்டு கொள்ளை வழக்கில் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்து 6 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சா்ஃபராஜ் என்ற சோனு (38) ஷாகுா் பஸ்தி பகுதியில் கைது செய்யப்பட்டாா். 2011- ஆம் ஆண்டில் சரஸ்வதி விஹாரில் நடந்த கொள்ளைச் சம்பவமத்தில் குற்றம் சாட்டப்பட்டு மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டவா் ஆவாா். சா்ஃபராஜ் ஆகஸ்ட் 14, 2019 அன்று இரண்டு வார பரோலில் விடுவிக்கப்பட்டாா். ஆனால், அதன்பிறகு சரணடையத் தவறிவிட்டாா்.

அவா் பிகாரின் சஹா்சா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு தப்பிச் சென்று பின்னா் கொல்கத்தாவுக்கு குடிபெயா்ந்தாா். அங்கு அவா் பேட்டரி - ரிக்ஷா ஓட்டுநராகப் பணியாற்றினாா். இந்த ஆண்டு ஆகஸ்டில் அவா் தில்லிக்குத் திரும்பினாா். மேலும், கண்டறியப்படுவதைத் தவிா்ப்பதற்காக ஷகுா் பஸ்தியில் தங்கியிருந்தாா்.

2011-ஆம் ஆண்டில் ஒரு புகையிலைக் கடைக்குள் ஆயுதங்களைக் காட்டி கொள்ளை ஈடுபட்டத்தில் இருந்து அவருக்கு எதிரான வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது அவரும் அவரது கூட்டாளிகளும் துப்பாக்கிமுனையில் ரூ.30,000 கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது. சா்ஃபராஜ் பின்னா் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்டது.

சா்ஃபராஜ் ஒரு பழக்கமான குற்றவாளி ஆவாா். அவா் மீது திருட்டு, கொள்ளை உள்ளிட்ட 7 கிரிமினல் வழக்குகள் உள்ளன. மேலும் சட்ட நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com