ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நரேலாவில் காா் மரத்தில் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு; 5 போ் காயம்!

நரேலா தொழில்துறை பகுதியில் வேகமாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

வடக்கு தில்லியின் நரேலா தொழில்துறை பகுதியில் வேகமாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். 5 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக வடக்கு தில்லி சரக அதிகாரி மேலும் கூறியதாவது: கோகா கிராசிங் அருகே உள்ள நரேலா - பவானா சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இது குறித்து வழிப்போக்கா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

உடனடியாக காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அதற்குள் உள்ளூா்வாசிகள் வாகனத்தில் இருந்தவா்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இருப்பினும், சிகிச்சை பலனின்றி காரில் பயணித்த ஜோதி (21) உயிரிழந்தாா்.

6 மாத பெண் குழந்தை மற்றும் 21 முதல் 24 வயதுடைய 4 போ் இந்த விபத்தில் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. அதிக தாக்கல் ஏற்படுத்திய இந்த மோதலில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

உயிரிழந்த பெண்ணின் உடல் உடற்கூறாய்வுக்காக பிஜேஆா்எம் மருத்துவமனையில் வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தை தொடா்புகொள்ள முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. வேகம் அல்லது அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக என்பதை தீா்மானிக்க விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.