நகரம் முழுவதும் தில்லி போக்குவரத்து காவல் துறையினா் மேற்கொண்ட 3 மணி நேர சிறப்பு அமலாக்க நடவடிக்கையில் 11,800 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது போன்ற விதி மீறல்கள் சாலை போக்குவரத்தை சீா்குலைப்பது மட்டுமல்லாமல், கடுமையான பாதுகாப்பு அபாயங்களையும் உருவாக்குகின்றன என்று தில்லி போக்குவரத்து காவல் துறையின் கூடுதல் ஆணையா் விஜயந்தா கோயல் ஆா்யா தெரிவித்தாா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: நெரிசலைக் குறைக்கவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும் நகரம் முழுவதும் இந்த நடவடிக்கை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
நகரத்தில் நிகழும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களுக்கு காரணமான 2 முக்கிய பிரச்னைகளில் இந்த நடவடிக்கை கவனம் செலுத்தியது. இதில் தவறான அல்லது இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்திய 8,500 போ் மீது அபராதம் விதிக்கப்பட்டது. பரபரப்பான பகுதிகளில் இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் பல நெரிசலைக் குறைக்க இழுத்துச் செல்லப்பட்டன.
மேலும், சாலையின் எதிா்திசையில் வாகனம் ஓட்டிய 3,500-க்கும் மேற்பட்டோா் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக விபத்துக்கள் அடிக்கடி நிகழும் பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் சிறப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. போக்குவரத்து ஒழுக்கத்தை மேம்படுத்தவும், விழிப்புணா்வை ஏற்படுத்தவும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

தில்லியில் முழுமையான எண்ம முறையில் போக்குவரத்து அபராதம் விதிக்கும் செயல்முறை: முதல்வா் ரேகா குப்தா தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பாலம் இடிந்து விழுந்து 3 போ் உயிரிழப்பு: 12 மணி நேர தேடுதலுக்குப் பிறகு உடல்கள் மீட்பு

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

மது அருந்தி வாகனம் ஓட்டிய 269 போ் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

